திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் வருகிற 28-ஆம் தேதி வரை ஜமாபந்தி நடைபெறும் ஊர்களின் விவரம் வருமாறு,
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் வருவாய்த் துறை கணக்குகளை தணிக்கை செய்வதற்கான, வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி கடந்த 16-ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கியது. சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் ஜமாபந்தி நடைபெறவில்லை. இன்று கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. இதனால் ஜமாபந்தி நிகழ்ச்சி நடக்கவில்லை.
திருவண்ணாமலை தாலுகாக அலுவலகத்தில் வருகிற 28-ஆம் தேதி வரை கலெக்டர் தர்ப்பகராஜ் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெறுகிறார். முதல் நாள் மேப்பத்துறை, நார்த்தாம்பூண்டி, பெரியகிளாம்பாடி, கார்கோணம், வடபுழுதியூர், பொற்குணம், சாலையனூர், தேவனாம்பட்டு ஆகிய ஊர்களுக்கு ஜமாபந்தி நடைபெற்றது.
தாசில்தார் சு.மோகனராமன் தலைமை தாங்கினார். கலெக்டர் தர்ப்பகராஜ் கலந்து கொண்டு கிராம மக்களிடம் மனுக்களை பெற்றதோடு, கிராம கணக்குகளை சரிபார்த்தார். இந்த கூட்டத்தில் சில மாவட்ட அதிகாரிகள் பங்கேற்கவில்லை. குறிப்பாக வேளாண்மை இணை இயக்குநர் கண்ணகி கலந்து கொள்ளவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த கலெக்டர், மாவட்ட அதிகாரிகள்தான் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என கூறினார். இதையடுத்து கூட்டத்தில் இருந்த வேளாண்மை விரிவாக்க அலுவலர்கள் வெளியேறினர்.
நாளை (19ந் தேதி) செவ்வாய்கிழமை, திருவண்ணாமலை நகரம், ஆடையூர், சின்னகாங்கியனூர், நொச்சிமலை, சாவல்பூண்டி, அடிஅண்ணாமலை, அய்யம்பாளையம் ஆகிய ஊர்களுக்கான ஜமாபந்தி நடக்கிறது.
துரிஞ்சாபுரம் உள்வட்டம்– 21.05.2025, புதன்கிழமை
1. துரிஞ்சாபுரம் 2. களஸ்தம்பாடி 3.இனாம்காரியந்தல் 4.சொரகுளத்தூர் 5. மாதலம்பாடி 6.கருந்துவாம்பாடி 7.இனாம்வெளுக்கனந்தல்
தச்சம்பட்டு உள்வட்டம்– 22.05.2025. வியாழன்கிழமை
1. காட்டாம்பூண்டி 2. பாவுப்பட்டு 3. சின்னகல்லப்பாடி 4. தலையாம்பள்ளம் 5. சக்கரத்தாமடை 6.நரியாப்பட்டு 7.பழையனூர் 8. கல்லொட்டு 9. கண்டியாங்குப்பம் 10.வேலையாம்பாக்கம் 11. தச்சம்பட்டு
தச்சம்பட்டு (ம) மங்கலம் உள்வட்டம்– 23.05.2025. வெள்ளிக்கிழமை
1. நவம்பட்டு 2. பெரியகல்லப்பாடி 3. பெருமணம்
மங்கலம் உள்வட்டம்
1. வள்ளிவாகை 2.வடஆண்டாப்பட்டு 3.ஆர்ப்பாக்கம் 4.நூக்காம்பாடி 5.மங்கலம்
திருவண்ணாமலை தெற்கு உள்வட்டம்- 27-05-2025, செவ்வாய்கிழமை
1. சமுத்திரம் 2.அரடாப்பட்டு 3.சு.பாப்பம்பாடி 4.கீழ்கச்சிராப்பட்டு 5.மேல்செட்டிப்பட்டு 6. கொளக்குடி
திருவண்ணாமலை தெற்கு (ம) வெறையூர் உள்வட்டம்– 28.05.2025. புதன்கிழமை
1. பவித்திரம் 2.மெய்யூர்
வெறையூர் உள்வட்டம்
1.வெறையூர் 2.சு.நல்லூர் 3.விருதுவிளங்கினான் 4.சு.வாளவெட்டி
மேற்கண்ட தேதிகளில் நடைபெறும் ஜமாபந்தியில் புதிய பட்டா, பட்டா பெயர் மாற்றம், குடும்பஅட்டை, வீடு அளவை, நிலஅளவை உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்களை கலெக்டரிடம், பொதுமக்கள் தரலாம்.
இதே போல் கலசபாக்கம் தாலுகாவில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) தலைமையிலும், செங்கம் தாலுகாவில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) தலைமையிலும், வெம்பாக்கம் தாலுகாவில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் தலைமையிலும், செய்யாறு தாலுகாவில் பழங்குடியினர் நல திட்ட இயக்குநர் தலைமையிலும் ஜமாபந்தி நடைபெறும்,
மேலும், கீழ்பென்னாத்தூர் தாலுகாவில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தலைமையிலும், வந்தவாசி தாலுகாவில் கலால் உதவி ஆணையர் தலைமையிலும், ஜமுனாமரத்தூர் தாலுகாவில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தலைமையிலும் ஜமாபந்தி நடைபெறுகிறது.
LINK:- NEWS THIRUVANNAMALAI