அமைச்சர் எ.வ.வேலு, திருவண்ணாமலை கோர்ட்டில் இன்று ஆஜர் ஆனார்.
தமிழக பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, இன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
காலை 9 மணி முதல் சமுத்திரம் அத்தியந்தல் ,வேங்கிக்கால் மலப்பாம்பாடி போன்ற பகுதிகளில் சமுதாயக்கூடம் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார் என அரசு தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் முதல் நிகழ்ச்சி சமுத்திரத்திலிருந்து மலப்பாம்பாடிக்கு மாற்றப்பட்டது. மலப்பாம்பாடியில் காலை 10 மணிக்கு சமுதாயக்கூடம் கட்டுவதற்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து வேங்கிக்கால், அத்தியந்தல் போன்ற பகுதியில் அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டினார்.
இதைத் தொடர்ந்து தண்டராம்பட்டு ரோடு நல்லவன்பாளையம் சமுத்திரம் பகுதியில் நடைபெற்ற கால்கோள் விழாவிற்கு அமைச்சர் வருவார் என கட்சி நிர்வாகிகளும், செய்தியாளர்களும் காத்திருந்தனர். ஆனால் அமைச்சர் வரவில்லை. உடல்நிலை சரியில்லாததால் சிறிது நேரம் ஓய்வுக்கு பிறகு அவர் வருவார் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அந்த நேரத்தில் எ.வ.வேலு, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இருக்கும் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு 1-வது கோர்ட்டில் ஆஜர் ஆனார்.
FIR விவரம்
27-3-2011 அன்று மாலை செய்யாறு வட்டம் பாராசூர் கிராமத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் காங்கிரஸ் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் நடைபெற அனுமதி பெறவில்லை என கல்லூரி முதல்வர் விசாரணை அலுவலரிடம் தெரிவித்தார். இதில் எ.வ. வேலு (அப்போது உணவுத்துறை அமைச்சர்), ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் விஷ்ணுபிரசாத் உள்பட 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த விழா குறித்து எந்த வித முன் அனுமதியும் பெறாததால் தக்க நடவடிக்கை எடுக்க கோரி அப்போது தேர்தல் கண்காணிப்பு குழுவில் இருந்த மண்டல துணை தாசில்தார் உலகநாதன் செய்யார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.
அதன் பேரில் போலீசார் எ.வ.வேலு, கிருஷ்ணசாமி எம்.பி, விஷ்ணு பிரசாத் எம்.எல்.ஏ ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இன்று நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் மூன்று பேரும் மாஜிஸ்திரேட்டு ரேவதி முன்பு ஆஜரானார்கள். இந்த வழக்கின் விசாரணை வருகிற 23ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு அமைச்சர் எ.வ.வேலு காமராஜர் சிலை அருகில் பழைய அரசு மருத்துவமனைக்கு எதிரில் எதிரில் கட்டப்பட்டு வரும் நவீன சமுதாய கூட பணிகளை பார்வையிட்டார். பிறகு நல்லவன்பாளையம் பகுதியில் புதிய சமுதாயக்கூடம் கட்ட அடிக்கல் நாட்டினார். அதன் பிறகு எடப்பாளையம் ஏரி கரையில் பூங்கா அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.
செய்தியாளர்களை கோர்ட்டுக்கு வராமல் தடுப்பதற்காக அமைச்சரின் நிகழ்ச்சி நிரல் மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதை பாஜக ஆன்மீக பிரிவின் மாநில துணைத் தலைவர் டி.எஸ்.சங்கர் கிண்டல் செய்யும் விதமாக கீழ்கண்ட பதிவை வெளியிட்டிருக்கிறார்.