26-4-2025 அன்று ராகு பகவான் மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கும்,கேது பகவான் கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சி ஆகி உள்ளார். 11-5-2025 பகல் 1-19 மணிக்கு குருபகவான் மிதுன ராசிக்கு செல்கிறார். இந்த 2 பெயர்ச்சிகளும் கடகம், சிம்மம், கன்னி ஆகிய ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம்.
கடக ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 11 ல் சஞ்சரித்த குரு பகவான் வரும் 11/5/2025 முதல் 12ம் இடத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். அவர் அங்கிருந்து 4, 6, 8, ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். சனி பகவான் 8ல் அமர்ந்து 10, 2, 5 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். இராகு கேதுக்கள் வரும் 26. 4 .2025 முதல் 8.2 ஆகிய இடங்களுக்கு பெயர்ந்து தத்தம் இடங்களை மாறி பார்வையிடுகின்றனர்.
இந்த கிரக அமைப்புகள் உங்கள் ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி காலத்தில் எவ்வித பலன்களை தரும் என்று பார்ப்போம் வாருங்கள்!
உங்களது உடல் ஸ்தானத்தை பொருத்தவரை குரு பகவான் 12 ல் அமர்ந்து பணரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவார். இதனால் உடல் நல பாதிப்பு ஏற்படும். அதே போல் இவர்களுக்கு குரு பகவான் விரைய ஸ்தானத்திற்கு வருவது பணரீதியான சில பாதகங்கள் கண்டிப்பாக ஏற்படும். இதை சுபச் செலவுகளாக மாற்றுவது உங்கள் கையில் தான் உள்ளது.
ஏற்கனவே உங்களுக்கு அஷ்டமத்து சனி காலம் நடந்து கொண்டிருக்கிறது. அடுத்த வருடம் உங்கள் வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை நிச்சயம் எதிர்பார்க்கலாம். முதலில் மனச்சோர்வு ஏற்படும். பின் உடல் நலத்தில் பாதிப்பு ஏற்படும். ஆகவே அதை நீக்க அதற்கு தகுந்த வழிமுறைகளை கையாண்டு கொள்ளவும்.
உங்களது தனஸ்தானத்தை பொருத்தவரை இங்கு கேது பகவான் அமர்ந்து சனி பகவான் பார்வையிடுகிறார். ஆகவே தன வரவில் தடை ஏற்படும் காலமாகும். வரவு குறைவாகி செலவு அதிகம் ஏற்படும். வாழ்க்கையில் சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும்.
உங்களது வாக்கு ஸ்தானத்தை பொருத்தவரை ‘தவளையும் தன் வாயால் கெடும்’ என்பது உங்களுக்கு பொருந்தும். ஆகவே வாய் வார்த்தைகளை சரியாக வெளிவிட வேண்டும். யாருக்கும் ஜாமீன் நிற்பதோ அல்லது கையெழுத்து போடுவதோ கூடாது. மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உங்கள் குடும்பத்தை பொருத்தவரை சஞ்சலமான சூழ்நிலை உண்டு. ஆகவே ராகு கேது வழிபாடு பிரதி செவ்வாய் தோறும் செய்து வந்தால் குடும்பத்தில் சஞ்சலங்கள் குறைந்து சந்தோசம் அதிகமாகும்.
உங்களது தைரிய ஸ்தானத்தை பொருத்தவரை இங்கு மனரீதியான சில சங்கடங்கள் உருவாவதால் விழிப்புடன் இருக்க வேண்டும். நாம் மட்டுமல்ல நம்மை சார்ந்தவர்களும் பலவீனப்படக்கூடிய சூழ்நிலை உள்ளதால் இறை வழிபாட்டை இயன்ற அளவு செய்து வரவும்.
உங்களது சகோதர பாவத்தை பொருத்தவரை பிணக்குகள் அதிகம் ஏற்பட வாய்ப்பு உண்டு. கவனம் தேவை. அவர்களை விட்டு சற்று தூரம் தள்ளி இருப்பது மிகவும் நல்லது. போதுமானவரை பேச்சு வழக்கங்களை சரியான முறையில் கொண்டு செல்வது நலம் தரும்.
உங்களது தாய் ஸ்தானத்தை பொருத்தவரை இங்கு குருவின் அருட்பார்வை பெறுவதால் தாயின் ஆயுளுக்கு பங்கம் இல்லை. அதே சமயம் உடல் நிலையில் வெப்பம், ஜுரம் மறைவிட உறுப்புகள் சம்பந்தப்பட்ட வகையில் ஏதாவது கோளாறுகள் வந்து நீங்கும். தாய்- மக்கள் உறவு முறை சீர் பெறும் காலமாகும். ஒரு சிலருக்கு தாயால் ஆதாய வரவு உண்டாகும்.
உங்களது வீடு மனையை பொறுத்தவரை குருபகவான் பார்வையால் மனை வாங்க கூடிய யோகம் உருவாகும். ஆனால் உங்கள் வீட்டில் உள்ள பெண்கள் பெயரில் வாங்கினால் நன்றாக இருக்கும். ஒரு சிலருக்கு வீட்டில் மராமத்து பணிகளை செய்ய உகந்த காலமாகும். உங்களது வண்டி, வாகன ஸ்தானமானது பலவீனமான சூழ்நிலையில் உள்ளதால் புதிய வண்டி வாங்குவதற்கு ஏதுவான காலமில்லை. வாகனங்களில் பயணம் செய்யும் பொழுது மிகுந்த எச்சரிக்கை தேவை.
உங்களது பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பொருத்தவரை இவ்விடத்திற்கு சனி பகவான் பார்வை விழுகின்றது. ஆகவே குலதெய்வ கோவிலுக்கு சென்று அபிஷேக ஆராதனை செய்து வந்தால் நல்லது நடக்கும். பாவ பலன்கள் குறைந்து புண்ணிய பலம் அதிகமாகும். உங்களது புத்திர பாக்கியத்தை பொருத்தவரை புத்திரப் பேறு இல்லாதவர்களுக்கு சனி பகவானுக்கு பரிகாரம் செய்வதன் மூலம் புத்திர பாக்கியத்தை அடையலாம்.
ஜாதகத்தில் புத்திர தோஷம் உடையவர்கள் தகுந்த பரிகாரங்களை செய்து கொள்ளவும். உங்கள் குழந்தைகளின் கல்வி நிலை, உடல்நிலை கவனிக்கப்பட வேண்டியதாகும். ஜாக்கிரதையாக இருக்கவும். உங்களது கடன் ஸ்தானத்தை பொருத்தவரை இங்கு குருவின் அருட்பார்வை விழுவதால் கடன் கூடுவதற்கு வாய்ப்பு உண்டு. குரு பார்வை கோடி நன்மையே. அது கடன் ஸ்தானத்திற்கு விழுவதால் மிகுந்த எச்சரிக்கை தேவை. தேவையில்லாமல் கடன் வாங்குவதை தவிர்க்கவும்.
உங்களது உடல் நிலையைப் பொருத்தவரை முகம் மாறுதல் ஏற்படும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை கோமியத்தால் முகம் கழுவுவது முகம் பிரகாசிக்கும். வசிய சக்தி உண்டாகும். அடுத்ததாக வாதம், கபம், பித்தம், சளி போன்ற நோய் தாக்கங்கள் ஏற்பட்டு நீங்கும். உங்களது திருமண பாவத்தை பொறுத்தவரை ஒரு சிலருக்கு சுப விரய குருவால் திருமணம் நடைபெற ஏதுவாகும். ஜாதகத்தில் ஏதாவது திருமண தோஷங்கள் இருந்தால் தக்க பரிகாரங்களை செய்வதன் மூலம் திருமண பிராப்தியை அடைய முடியும்.
திருமணமான கணவன், மனைவிக்கிடையே சில பிரச்சனைகள் இருந்து வந்தாலும் அவை வரும் காலங்களில் சுமூகமாக தீர்க்கப்படும். யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து சென்று விட்டால் வாழ்க்கையில் எந்தப் பிரச்சினையும் ஏற்படுவதற்கு வாய்ப்பே கிடையாது. உங்களது மாங்கல்ய ஸ்தானத்தில் சனி, ராகு ஆகிய கிரகங்கள் இணைந்து அமர்ந்திருப்பதால் சனிக்கிழமையில் ராகு காலத்தில் விநாயகருக்கோ அல்லது அனுமனுக்கோ நெய் தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் நல்லது.
உங்களது ஆயுள் பாவம் தீர்க்கமாக உள்ளது. உங்களது சத்ரு ஸ்தானமானது பலவீனப்படக்கூடிய சூழ்நிலை ஆகும். எதிரிகள் என்பவர்கள் உங்களுக்கு இத் தருணத்தில் இருக்கவே மாட்டார்கள். அனைவரையும் அனுசரித்து வாழ கற்றுக் கொள்ளுங்கள்.
உங்களது பாக்ய ஸ்தானத்தை பொருத்தவரை இந்த இடம் சற்று பலவீனமாக உள்ளது. உங்கள் தந்தையாரின் ஆயுள் பாவம் நன்றாக இருந்தாலும் உடல் நிலையில் சுமாரான பலன்களே காணப்படும். நெஞ்சு சளி, வாதம் போன்ற நோய்களால் பீடிக்கப்படக்கூடிய சூழ்நிலை உண்டு. தந்தையாரின் சொத்துக்கள் நன்முறையில் பிரித்து எழுதுவதற்கு வாய்ப்பு உருவாகும். மேலும் தந்தை- மக்கள் உறவு முறை சீர் பெறக்கூடிய காலமாகும். தந்தையாரை சீராக கவனித்துக் கொள்ளவும்.
உங்களது உயர் கல்வி ஸ்தானமானது பின் தங்கிய நிலையில் உள்ளதால் சற்று எச்சரிக்கை தேவை. நீங்கள் பாடங்களில் கவனம் செலுத்தி வந்தால் கல்வி நிலை மேம்படும். உங்களது ஜீவன ஸ்தானத்தை பொருத்தவரை இங்கு சனிபகவான் பார்வை விழுந்துள்ளதால் விவசாயத் துறையினருக்கு விளைச்சல் மந்தமாகவும், மருத்துவத்துறையினருக்கு மந்தமான சூழ்நிலையும்,
இரும்பு சம்பந்தப்பட்ட துறையினருக்கு இன்னல்கள் ஏற்படுவதும், சுயதொழில் புரிவோருக்கு சுணக்கம் ஏற்படுதலும், கலைத்துறை சார்ந்தவர்களுக்கு காலம் கைவிடுவதும், அரசு மற்றும் தனியார் துறையில் உள்ளவர்களுக்கு வேலை பளு அதிகமாதலும் நடக்கும். வேலையில்லாதவர்களுக்கு தகுந்த வேலை கிடைக்காது.
அரசு ஊழியர்கள் கையூட்டு விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உங்கள் லாப ஸ்தானத்தை பொருத்தவரை மிதமான பலன்களே நடக்கும். உங்களுக்கு இப்போது அஷ்டமத்து சனி, விரைய குரு, நாக தோஷம் என்று வரிசையாக கிரகங்கள் உங்களை மறைத்து வரிசை கட்டிக் கொண்டிருக்கின்றனர்.
குடும்ப ரீதியாகவும், மனரீதியாகவும், பணரீதியாகவும் சில தாக்கங்கள் கண்டிப்பாக உண்டு. 2026 வது வருடம் நிச்சயமாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் காணக்கூடிய சூழ்நிலை உண்டு. அதுவரை பொறுமையை கடைபிடிப்பது நல்லது.
உங்களது அயன சயன ஸ்தானத்தை பொருத்தவரை இவ்விடத்தில் குரு அமர்ந்து பரிபாலனம் செய்கிறார்.
உங்கள் ராசிக்கு எந்த ஒரு கிரகங்களும் சுப பலன்களை தருவதற்கு வாய்ப்பு குறைவாகவே உள்ளது. குருவின் பார்வை பலத்தால் ஓரளவிற்கு நீங்கள் தப்பிக்க முடிகிறது. ஆகவே எதையும் பற்றி நினைக்காமல் உங்களுக்கு உண்டான வேலைகளை செய்து கொண்டிருப்பது நல்லது. மற்றவர்கள் வேலைகளை இழுத்துப் போட்டு செய்து கொண்டிருக்க வேண்டாம். குடும்பத்தில் சலசலப்பு ஏற்பட்டாலும் அமைதியாக இருப்பது மிகவும் நல்லது.
உங்கள் ராசிக்கு அதிபதி சந்திரனின் அதி தேவதையான ஆதிபராசக்தியை வழிபட்டு வந்தால் ஆனந்தம் பெருகும். நல்லதே நடக்கும்! வாழ்க வளமுடன்!!
பரிகாரம் : திட்டை, ஆலங்குடி, பட்ட மங்கலம் ஊர்களில் உள்ள குரு பகவானுக்கு பிரீதி செய்வதும், திருநள்ளாறு, ஏரி குப்பம், குச்சனூர் ஸ்தலங்களில் உள்ள சனி பகவானுக்கு அர்ச்சனை செய்வதும், திருப்பாம்புரம், திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம், காளகஸ்தி போன்ற ஸ்தலங்களில் உள்ள ராகு, கேதுகளுக்கு வழிபாடு செய்வதும், ஏழை குழந்தைகளுக்கு புத்தக தானம் வழங்குவதும், நூல்களில் கோளறு பதிகத்தை பாராயணம் செய்வதும், நாங்கள் 18/5/2025 ல் ஏற்பாடு செய்துள்ள மகா நவகிரக பரிகார ஹோமத்தில் கலந்து கொள்வதும் மிகச் சிறந்த பரிகாரங்கள் ஆகும்.
சிம்ம ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 10ல் சஞ்சரித்த குரு பகவான் வரும் 11/5/2025 முதல் 11ஆம் இடம் பெயர்ந்து பலன் தர உள்ளார். அவர் அங்கிருந்து 3, 5,7 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். சனி பகவான் 7ல் அமர்ந்து 9,1,4 இடங்களை பார்வையிடுகிறார். இராகு, கேதுக்கள் வரும் 26/4/2025 முதல் 7.1 ஆகிய இடங்களுக்கு பெயர்ந்து தத்தம் இடங்களை மாறி பார்வையிடுகின்றனர்.
ஆகவே இந்த கிரக அமைப்புகள் உங்கள் ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி காலத்தில் எவ்வித பலன்களை வழங்கும் என்று பார்ப்போம் வாருங்கள்!
உங்களது உடல் ஸ்தானத்தை பொருத்தவரை இங்கு கேது பகவான் அமர்ந்து சனி பகவான் பார்வையிடுகிறார். நீங்கள் ஏற்கனவே கண்டகச் சனியில் மாட்டிக் கொண்டு உள்ளீர்கள். போதாக்குறைக்கு ஜென்மத்தில் கேது பகவான் அமர்ந்து பரிபாலன் செய்யப் போகிறார். உங்கள் மனநிலையில் பெரும் குழப்பம் ஏற்படும். எதைச் செய்வது எதை விடுவது என்ற சிந்தனை மேலோங்கும். செய்கின்ற காரியங்களில் தடைகள் ஏற்படும். மனச் சஞ்சலம் வந்தாலே உடல்நிலை பாதிக்கப்படும்.ஆகவே சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்த குரு பெயர்ச்சி காலத்தை சரியானபடி கடக்க முடியும்.
உங்களுக்கு லாப ஸ்தானத்தில் குரு ஒருவரே சாதகமான சூழ்நிலையில் உள்ளார். உங்களது தனஸ்தானத்தை பொருத்தவரை கடந்த காலத்தை காட்டிலும் வரும் காலம் ஓரளவு பண வசதி பெருகும். இருப்பதை சுற்றி இருப்பவர்களுக்கு கொடுத்துவிட்டு டாம்பீகமாக வாழ வேண்டாம். குடும்பத்தில் ஏற்படும் சூழ்நிலைகளை அனுசரித்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.
உங்களது வாக்கு ஸ்தானத்தை பொருத்தவரை அமைதியாக இருந்து விடுவது நல்லது. தானுண்டு தன் வேலை உண்டு என்று இருந்து விடவும். ஜாமீன் கையெழுத்தோ அல்லது முன் ஜாமீன் நிற்பதோ கூடாது. குடும்பத்தில் குழப்பங்களும் உண்டு. தெளிவும் உண்டு. உங்களது குடும்ப ஸ்தானமானது மேலிருந்து கீழ் கீழிருந்து மேல் என்று ஓடிக்கொண்டே இருக்கும். உங்களது தைரிய ஸ்தானத்தை பொருத்தவரை இங்கு குரு பார்வை கிடைப்பதால் தைரியம் கூடும் காலமாகும். எதையும் சமாளிக்கும் திறமை ஏற்படும். அதே சமயம் மன பயம் என்பது இருந்து கொண்டே இருக்கும். மன பயத்தை தீர்க்க திருபுவனம் ஸ்ரீ சரபேஸ்வரரை வணங்கி வரவும்.
உங்களது சகோதரஸ்தானமானது வலுவான நிலையில் உள்ளதால் அவர்களால் ஆதாயம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டு. அவர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். அனுசரித்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும். சகோதர சகோதரி வகையில் சுபச் செலவுகள் உருவாவதற்கு வாய்ப்பு உண்டு.
உங்கள் தாய் ஸ்தானத்தை பொருத்தவரை இங்கு சனி பகவான் பார்வை விழுகிறது. தாயின் உடல் நிலையில் எச்சரிக்கை தேவை. ஆயுளுக்கு பங்கம் கிடையாது. தாய்- மக்கள் உறவு முறை சீர் பெறும். தாய் சம்பந்தப்பட்ட வகையில் ஒரு சிலருக்கு அனுகூலம் உருவாகும். உங்களது வீடு, மனையை பொறுத்தவரை இருப்பதை அப்படியே வைத்துக் கொள்வது நல்லது. புதிய முயற்சிகள் ஏதும் துவங்க வேண்டாம். வீடு, மனை வாங்குவதற்கு இது உகந்த காலம் அல்ல. இருப்பினும் லாப ஸ்தானத்தில் குரு அமர்ந்து இருப்பதால் வீட்டில் உள்ள பெண்கள் பெயரில் மனை வாங்குவதற்கு நல்ல காலமாகும்.
உங்களது வண்டி, வாகன ஸ்தானத்தை பொருத்தவரை வரக்கூடிய காலங்கள் போதிய பலம் இல்லாமல் உள்ளது. ஆகவே புதிய வாகனங்கள் ஏதும் வாங்க வேண்டாம். இருக்கும் வாகனங்களில் உள்ள பழுவு செலவுகளை மட்டும் செய்து வண்டியை ஓட்டிக் கொள்ளவும். எல்லை தெய்வங்களுக்கு உங்களை வாகனங்களை வைத்து பூஜை| போட்டுக் கொள்ளவும். சுபீட்சம் பெறும்.
உங்களது பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பொருத்தவரை இவ்விடத்திற்கு குரு பகவான் பார்வை படுகிறது. ஆகவே பூர்வ புண்ணியம் பலம் பெறுகிறது. கிரக பெயிற்சிகளால் ஏற்படும் தீய பலன்களை குறைந்து புண்ணிய பலன்கள் அதிகமாகும். உங்களது புத்திர ஸ்தானத்தை பொருத்தவரை குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு இவ்வருடத்தில் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிட்டும்.
ஜாதகத்தில் புத்திர தோஷம் இருப்பவர்கள் தகுந்த பரிகாரங்களை செய்து கொள்ளவும். அல்லது எங்களிடம் கிடைக்கும் குரு யந்திரத்தை வாங்கி வழிபட்டு வரவும். உங்கள் குழந்தைகளின் கல்வி நிலை, உடல்நிலை நன்றாக இருக்கும். உங்களது கடன் ஸ்தானத்தை பொருத்தவரை கடன்கள் கட்டுக்குள் வரும் காலமாகும். ஒரு கடனை அடைக்க பிரிதொரு கடன் வாங்க வேண்டாம். இருப்பதை வைத்து குடும்பத்தை வழி நடத்த கற்றுக் கொள்ள வேண்டும். ஜாமீன் கையெழுத்து போடுவதில் எச்சரிக்கை தேவை.
உங்களது ரோக ஸ்தானத்தை பொருத்தவரை சளி மற்றும் வெப்பம் சம்பந்தப்பட்ட அமைப்புகளால் பிணி, பீடைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. சனி, ராகு எட்டில் இருப்பதால் கொஞ்சம் எச்சரிக்கை தேவை. உங்களது திருமண பாவத்தை பொறுத்தவரை இங்கு சனி, ராகு ஆகிய இருவரும் அமர்ந்துள்ளனர். குரு 11-ல் இருப்பது உங்களுக்கு குரு பலமான நேரமே. ஆனால் 7வது வீட்டில் சனி, ராகு இருப்பது திருமண தடைகளை ஏற்படுத்தும்.
ஆகவே திருமணஞ்சேரி சென்று திருமண மாலை வாங்குவதும் எங்களிடம் கிடைக்கும் ஸ்வயம்வர பார்வதி யந்திரத்தை வாங்கி வழிபட்டு வருவதும் திருமண தடைகளை நீக்கும். திருமணம் ஆன தம்பதியர்களுக்கு இடையில் சற்று முரண்பாடான அமைப்புகள் தென்படுகிறது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் சென்றால் விட்டால் எந்த பிரச்சினையும் ஏற்படுவதில்லை. சூழ்நிலைகளை அனுசரித்து கணவன், மனைவி உறவை சீர்படுத்திக் கொள்ளவும்.
உங்களது மாங்கல்ய ஸ்தானமானது மிகவும் அருமையாக உள்ளது. மாங்கல்யத்திற்கு எந்தவிதமான தோஷமும் இல்லை. உங்கள் ஆயுள் பாவம் நன்றாக உள்ளது. ஆயுள் விருத்தி உண்டாகும். உங்களது சத்துரு பாவத்தை பொறுத்தவரை உடன் இருப்பவர்களே குழி பறிக்க ஆரம்பிப்பார்கள். ஆகவே கவனமுடன் இருக்க வேண்டும்.
உங்களது பாக்கியஸ்தானத்தை பொருத்தவரை இவ்விடத்திற்கு சனி பகவான் பார்வை விழுகிறது. தந்தையாரின் உடல் நிலையில் எச்சரிக்கை தேவை. வீட்டில் வயது முதிர்ந்தோர்கள் இருந்தால் கொஞ்சம் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். தந்தைக்கு சதை, எலும்பு மற்றும் கைகால் மூட்டு போன்றவற்றில் நோய்கள்| ஏற்பட வாய்ப்பு உண்டு.
தந்தை- மக்கள் உறவுமுறை சிறிது பின்தங்கி உள்ளது. தந்தை வழி சொத்துக்கள் சரியான முறையில் பிரித்து அளிக்கப்பட தகுந்த உபாயங்களை கையாண்டு கொள்ளவும். உங்களது உயர் கல்வி ஸ்தானமானது தடை ஏற்பட்டுள்ளது. ஆகவே லக்ஷ்மி ஹயக்ரீவர் அல்லது கூத்தனூர் சரஸ்வதியை வழிபட்டு வர தடைகள் நீங்கி சுபிட்சம் பெருகும். உங்களது ஜீவனஸ்தானத்தை பொருத்தவரை கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாது.
விவசாயத் துறையினருக்கு விளைச்சல் சுமாராகவும், மருத்துவத்துறையினருக்கு மந்த காச புன்னகையும், இரும்பு சம்பந்தப்பட்ட துறையினருக்கு இன்னல்கள் விலகுவதும், சுயதொழில் புரிவோருக்கு சுணக்கம் நீங்குதலும், கலைத்துறை சார்ந்தவர்களுக்கு சிரமம் ஏற்படுதலும், அரசு மற்றும் தனியார் துறையில் உள்ளவர்களுக்கு வேலை பளு அதிகமாதலும், வேலையில்லாதவர்களுக்கு சிரமத்தின் பேரில் வேலை கிடைப்பதும் நடக்கும். சனி, ராகு எட்டில் இருப்பதால் எச்சரிக்கை தேவை.
உங்களது லாப ஸ்தானத்தை பொருத்தவரை இங்கு குரு பகவான் அமர்ந்துள்ளார். எது எப்படி இருப்பினும் கடந்த கால பொருளாதார சூழ்நிலையை காட்டிலும் வரும் காலம் மிகவும் நன்றாக இருக்கும். ஆனால் முழு பொருளாதார விருத்தி என்று கூற முடியாது. பணமும் வரும். அதற்கு தகுந்தபடி செலவுகளும் வரும். குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருநிலைப்படுத்தி குடும்ப செலவுகளை சமயோஜிதமாக கையாண்டு கொண்டால் இந்த காலம் உங்களுக்கு பொற்காலமே. அதே சமயம் உங்களுக்கு வெளியில் இருந்து வர வேண்டிய தொகைகள் ஓரளவிற்கு வந்து சேரும். இதுவே ஒரு பொருளாதார விருத்தி தான்.
உங்களது அயன, சயன பாவத்தை பொருத்தவரை குரு ஒருவரே சாதகமாக உள்ளார், சனி, ராகு,கேது ஆகிய கிரகங்கள் நிச்சயமற்ற தன்மையில் உள்ளன. ஆகவே இவர்கள் கொடுக்கும் அசுப பலன்களை சுப பலன்களாக மாற்றுவதற்கு குருவும் குரு பார்வையும் நிச்சயம் உங்களுக்கு உதவும்.
வாழ்க்கையில் மூன்று வருட காலத்திற்குப் பின்பு ஒரு நல்ல காற்றை சுவாசிக்க இருக்கிறீர்கள். பயப்பட வேண்டாம். உங்களது ராசி அதிபதி சூரியனின் அதி தேவதையான ஸ்ரீ சிவ சூரிய பெருமாளை சூரியனார் கோவில் சென்று வணங்கி வந்தால் தீமைகள் விலகி நன்மைகளை நிச்சயம் கொடுப்பார். வாழ்க வளமுடன்! நல்லதே நடக்கும்!
பரிகாரம் : திருநள்ளாறு, குச்சனூர், ஏரிக்குப்பம் சென்று சனி பகவானுக்கு தீபம் ஏற்றுவதும், காளகஸ்தி, திருப்பாம்புரம். திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளத்தில் உள்ள ராகு கேதுகளுக்கு பரிகாரம் செய்வதும், முதியோர்களுக்கு அன்னதானம் செய்தலும், கால்நடைகளுக்கு தீவனம் தானம் அளிப்பதும், நூல்களில் சூரிய கவசத்தை பாராயணம் செய்வதும், நாங்கள்18ஃ5ஃ2025 ல் ஏற்பாடு செய்துள்ள மகா நவகிரக பரிகார ஹோமத்தில் கலந்து கொள்வதும் மிகச் சிறந்த பரிகாரங்கள் ஆகும்.
கன்னி ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 9-ல் சஞ்சரித்து வந்த குரு பகவான் வரும் 11/5/2025 முதல் 10-ஆம் இடத்திற்கு பெயர்ந்து பலன் தர உள்ளார். அவர் அங்கிருந்து 2,4,6 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். சனி பகவான் 6ல் அமர்ந்து 8,12, 3 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். இராகு, கேதுக்கள் வரும் 26/4/2025 முதல் 6.12 ஆகிய இடங்களுக்கு பெயர்ந்து தத்தம் இடங்களை மாறி பார்வையிடுகின்றனர்.
இந்த கிரக அமைப்புகள் உங்கள் ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி காலத்தில் எவ்வித பலன்களை தரும் என்று பார்ப்போம் வாருங்கள்!
உங்களது உடல் ஸ்தானத்தை பொருத்தவரை இங்கு இருந்த கேது பகவான் விலகி 12ஆம் இடம் சென்று விட்டார். ஆகவே மனநிலையிலும், உடல் நிலையிலும் ஒரு பெரிய மாற்றம் நிச்சயமாக உண்டு. அது நல்ல மாற்றமாகவே இருக்கும். சிந்தனை ஒரு நிலைப்படும். அதேபோல் உடலில் இருந்து வந்த சோர்வு தன்மை நீங்கி தைரியம் பிறக்கக்கூடிய காலமாகும்.
உங்களுக்கு இந்த வருடம் முழுவதும் சனி பகவான் நல்ல சூழ்நிலையில் உள்ளதால் தேவையானவற்றை சாதித்துக் கொள்ள வேண்டும். உங்கள் தனஸ்தானத்தை பொருத்தவரை குருவின் பார்வை இவ்விடத்திற்கு விழுவது மிகவும் அருமையான நேரமாகும். மேலும் பொருளாதார தேவைகள் தேவைக்கேற்ப வந்து சேரும். கடன்கள் விஷயத்தில் ஜாக்கிரதை தேவை. பொருளாதாரத்தில் மிக ஒரு நல்ல சந்தோசமான சம்பவங்கள் நடைபெறக்கூடிய காலமாகும்.
உங்களது வாக்கு ஸ்தானத்தை பொருத்தவரை தேவையில்லாமல் பேசுவதை தவிர்க்கவும். நான் செய்து தருகிறேன் என்று சவால் விட்டு எந்த காரியங்களிலும் ஈடுபட வேண்டாம். தவளை எதனால் கெட்டது என்பதை புரிந்து கொள்ளவும். உங்கள் குடும்பத்தை பொறுத்தவரை அநேக காரியங்கள் தடை ஏற்பட்டு கொண்டே இருந்தது. இப்போது அந்த தடை நீங்கி சுபீட்சம் பெருகும். குடும்ப வாழ்க்கை சிறக்கும்.
உங்களது தைரிய ஸ்தானத்தை பொருத்தவரை சனி பார்வை விழுவதால் எவ்வளவுதான் நமக்கு உடல் அளவில் தைரியம் இருந்தாலும் மன அளவில் மன பயம் இருந்து கொண்டே இருக்கும். இது உங்களின் பிறவி பயனாகும். இதை நீக்க யோகா, ஆன்மீகம் போன்ற வழிகளில் கவனத்தை செலுத்தவும். உங்களது சகோதர, சகோதரி வகையில் சில பிணக்குகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அவர்களை அனுசரித்து போக கற்றுக் கொள்ளவும். எவ்விதமான சச்சரவுகளையும் அவர்களிடம் வைத்துக் கொள்ள வேண்டாம்.
உங்களது தாய் ஸ்தானத்திற்கு குரு பார்வை விழுவதால் அருமையான நேரமாகும். தாய்க்கு ஆயுள் நன்றாக இருக்கும். தாய் -மக்கள் உறவு முறை சீர் பெறும். தாயின் உடம்பில் வாதம், கபம், பித்தம், சளி போன்ற நோய் தொந்தரவுகள் ஏற்பட்டு நீங்கும். தாயால் சிலர் ஆதாயம் அடைவீர்கள்.
உங்களது வீடு, மனையை பொறுத்தவரை இந்த வருட காலத்திற்குள் புதிய வீடு வாங்கவோ அல்லது விற்கவோ, பரிமாற்றம் செய்யவோ அருமையான நேரமாகும். அடுத்து வரக்கூடிய 6 வருட காலத்திற்கு நீங்கள் எதையும் செய்ய முடியாது. யோசித்து முடிவு எடுத்துக் கொள்ளவும். உங்களது வண்டி, வாகன ஸ்தானமானது நன்றாக உள்ளது. புதிய வண்டிகள் வாங்குவதற்கு நல்ல நேரம் ஆகும்.
வண்டி வாங்க தேவையான கடனுதவிகள் அரசாங்கத்தின் மூலமாகவோ, தனியார் மூலமாகவோ நிச்சயம் கிடைக்கும். வாகனங்களில் பயணம் செய்யும்போது கொஞ்சம் எச்சரிக்கை தேவை.
உங்களது பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பொருத்தவரை இந்த இடம் சற்று பலவீனப்பட்டுள்ளது. ஆகவே உங்களுடைய குலதெய்வ கோவிலுக்கு சென்று அபிஷேகம், ஆராதனைகள், பிரார்த்தனை செய்து வந்தால் தீய பலன் குறைந்து நன்மையான பலன்கள் அதிகரிக்கும். உங்களது புத்திர பாக்கியம் சுமாராகவே உள்ளது.
ஜாதகத்தில் புத்திர தடை இருப்பவர்கள் தகுந்த பரிகாரங்களை செய்து கொள்ளுங்கள். அல்லது எங்களிடம் கிடைக்கும் ஸ்ரீ குரு யந்திரத்தை வாங்கி பூஜை செய்து வந்தால் புத்திரவிருத்தி உண்டாகும். உங்கள் குழந்தைகளின் ஆயுள் பாவம். உடல்நிலை ஓரளவுக்கு நன்றாகவே உள்ளது. அவர்களால் ஆதாயம் அடையப் பெறுவீர்கள். உங்களது கடன் ஸ்தானத்தை பொருத்தவரை சனி, ராகு ஆகிய இரு கிரகங்கள் வலுவான நிலையில் உள்ளதால் பொருளாதார ரீதியாக சமாளிக்கக்கூடிய அத்தனை யுத்திகளையும் உங்களுக்கு கொடுப்பார்கள்.
பணமும் வரும். பின்னால் செலவும் வரும். செலவினங்களை தவிர்க்க தகுந்த உபாயங்களை கையாளவும். இது இவ்வருடம் மட்டுமே. பொருளாதார ரீதியாக எந்த காரியங்களையும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போட வேண்டாம். உங்களது உடல் நிலையை பொறுத்த வரை சனி, ராகு இருவரும் அமர்ந்திருப்பதால் இனம் புரியாத நோய்கள் அதாவது கிருமிகள் சம்பந்தப்பட்ட அல்லது சளி, வாதம், கபம் போன்ற நோய்கள் உருவாகும் தகுந்த முன் எச்சரிக்கை தேவை.
உங்களது திருமண பாவமானது பலவீனப்பட்ட சூழ்நிலையில் உள்ளது. இப்போது உங்களுக்கு குரு பலமும் கிடையாது. 12 கட்டத்தில் நீங்கள் உபய ராசியாக வருவதால் திருமணம் கொஞ்சம் தாமதமாகவே நடக்கும். ஒன்றும் கவலைப்பட வேண்டாம். நல்லதே நடக்கும். திருமண தோஷம் உடையவர்கள் தகுந்த பரிகாரங்களை செய்து கொள்ளவும். அல்லது எங்களிடம் கிடைக்கும் ஸ்வயம்வரா பார்வதி யந்திரத்தை வாங்கி வழிபட்டு வந்தால் திருமண தடைகள் நீங்கும்.
திருமணமான கணவன்- மனைவிக்குள் அபிப்பிராய பேதங்கள் உருவாகும். இது பணரீதியாக மட்டுமே ஏற்படும். ஆகவே சூழ்நிலைக்கு தகுந்தவாறு முடிவு எடுக்க கற்றுக் கொள்ள வேண்டும். மேலும் கணவன், மனைவி தாம்பத்திய வாழ்க்கை சந்தோசமாக இருக்க ஸ்ரீ லட்சுமி நாராயணரை வழிபட்டு வரவும்.
உங்கள் ஆயுள் பாவமானது சனியின் பார்வை பலத்தால் அருமையாக உள்ளது. உங்களது மாங்கல்யத்திற்கு எந்த விதமான தோஷமும் கிடையாது. உங்களது சத்ரு பாவம் பலவீனப்பட்ட சூழ்நிலையில் உள்ளதால் எதற்கும் பயப்படாமல் துணிந்து செயல்களில் இறங்கவும்.
உங்களது பாக்யஸ்தானத்தை பொருத்தவரை நன்றாகவே உள்ளது. உங்கள் தந்தையாரின் ஆயுள் பாவம் தீர்க்கமாக இருக்கும். தந்தை- மக்கள் உறவு முறை சீர் பெறும். அதே போல் தந்தையாரின் சொத்துக்கள் தொடர்பாக பங்காளிகளின் தொந்தரவு நீங்க கூடிய காலமாகும். தந்தையாரின் உடல் நிலையில் சூடு சம்பந்தப்பட்ட அமைப்புகளால் பிணி,பீடைகள் ஏற்படும்.
உங்களது உயர் கல்வி ஸ்தானமானது நன்றாக இருக்கிறது. தடை பட்ட கல்வியை தாராளமாக தொடங்க முடியும். ஒரு சிலருக்கு அயல் தேசவாசம் அல்லது பிற மாநிலங்களுக்கு சென்று கல்வி கற்கும் யோகமும் உருவாகும். உங்களது ஜீவனஸ்தானத்தை பொருத்தவரை இவ்விடத்தில் குருபகவான் அமர்ந்துள்ளார்.
விவசாயத் துறையினருக்கு விளைச்சல் மிதமாகவும், மருத்துவத்துறையினருக்கு மந்தமான சூழ்நிலையும், இரும்பு சம்பந்தப்பட்ட துறையினருக்கு இறுக்கம் அகலுதலும், சுயதொழில் புரிவோருக்கு அரசாங்க கடன் உதவிகளும், கலைத்துறை சார்ந்தவர்களுக்கு காலம் கை கொடுப்பதும், அரசு மற்றும் தனியார் துறையில் உள்ளவர்களுக்கு தேவையில்லாத இட மாற்றமும், வேலையில்லாதவர்களுக்கு வேலையும் கிடைக்கும்.
உங்களது லாப ஸ்தானத்தை பொருத்தவரை சனி, ராகு ஆகிய இரு கிரகங்களின் ஆதிக்கம் கொடி கட்டி பறக்கிறது. குடும்ப நிலையிலும் சரி, வியாபாரத்திலும் சரி தந்திரங்களை கையாள வேண்டும். இது இவ்வருடம் முழுவதும் உங்களுக்கு பலனளிக்கும்.
அடுத்து வரக்கூடிய சனிப்பெயர்ச்சியானது, உங்களுக்கு மன அழுத்தம் நிறைந்த காலமாக இருக்கும். ஆகவே இவ்வருடத்தில் சாதிக்க வேண்டியவைகளை சாதித்துக் கொள்ளுங்கள். உங்களது அயன, சயன ஸ்தானத்தை பொருத்தவரை இங்கு கேது பகவான் அமர்ந்துள்ளார். இயற்கையாகவே கேது கிரகம் ஆன்மீக கிரகம் என்பதால் ஆன்மீகம், யோகா வழியில் வழிபட்டு வந்தால் உங்கள் குடும்ப வாழ்க்கை சிறக்கும்.
குரு 10-ல் அமர்ந்திருக்கிறார் என்று பயப்பட வேண்டாம். நிச்சயம் நல்லது நடக்கும். குரு பார்வை சாதகமாக விழுவதால் தைரியமாக களம் இறங்கவும். உங்களது ராசி அதிபதி புதனின் அதி தேவதையான ஸ்ரீமன் நாராயணரை வழிபட்டு வந்தால் சகலமும் சிறக்கும். நல்லதே நடக்கும்! வாழ்க வளமுடன்!!
பரிகாரம் : திட்டை, ஆலங்குடி, பட்டமங்கலம் ஊர்களில் உள்ள குரு பகவானுக்கு வழிபாடு செய்வதும், திருப்பாம்புரம், காளகஸ்தி, கீழப்பெரும்பள்ளம் ஊர்களில் உள்ள கேது பகவானுக்கு பிரீத்தி செய்வதும், முதியோர்களுக்கு ஆடை தானம் செய்வதும், நூல்களில் விஷ்ணு கவசத்தை பாராயணம் செய்வதும், நாங்கள் 18/5/2025 ல் ஏற்பாடு செய்துள்ள மகா நவகிரக பரிகார ஹோமத்தில் கலந்து கொள்வதும் மிகச் சிறந்த பரிகாரங்கள் ஆகும்.