Homeஆன்மீகம்தண்டபாணி ஆசிரமம் கணித்துள்ள குருபெயர்ச்சி பலன்கள்

தண்டபாணி ஆசிரமம் கணித்துள்ள குருபெயர்ச்சி பலன்கள்

குருபெயர்ச்சி பலன்களை திருவண்ணாமலை மலையேறும் பாதையில் உள்ள தண்டபாணி ஆசிரம செயலாளர் ஜோதிட ரத்னா டாக்டர் சீனிவாசன் கணித்து வெளியிட்டுள்ளார்.

ஒவ்வொரு ராசிக்குமான பலன்கள் வருமாறு,

தண்டபாணி ஆசிரமம் கணித்துள்ள குருபெயர்ச்சி பலன்கள்

11-5-2025 ஞாயிற்றுக்கிழமை, சித்திரை 28-ஆம் நன்னாளன்று பகல் 1-19 மணிஅளவில் ஸ்ரீ குருபகவான் மிதுன ராசிக்கு செல்கிறார்.

 

இந்த குரு பெயர்ச்சியால் அதிகளவு நன்மை பெறக்கூடிய ராசிகள் ரிஷபம், சிம்மம்,  துலாம், தனுசு, கும்பம் ஆகும். மத்திம பலன்களை பெறக்கூடிய ராசிகள் மேஷம்,  மீனம் ஆகும். தீய பலன்களை பெறக்கூடிய ராசிகள் கடகம், கன்னி, விருச்சிகம்,  மகரம் ஆகும். இருப்பினும் அனைத்து ராசி அன்பர்களும் இந்த குருபெயர்ச்சி மஹாயாக பூஜையில் பங்கேற்று அர்ச்சனை செய்து கொள்வது மிகவும் சிறந்த பரிகாரமாகும்.

திருஅண்ணாலையில் மலைச்சாரலில் 225 ஆண்டுகளுக்கு முன்பே ஸ்ரீசதானந்த யோகீஸ்வரரால் அமைக்கப்பட்ட பழமையான ஆஸ்ரமமான ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரம பீடாதிபதி பிரம்மரிஷி. வாலைச்சித்தர் (நவப்பாஷாண ஜோதிலிங்கம் பிரதிஷ்டை செய்தவர்) ஆசியுடன் அந்த ஆசிரமத்தின் செயலாளர் ஜோதிட ரத்னா டாக்டர் சீனிவாசன் கணித்துள்ள குருபெயர்ச்சி பலன்கள் வருமாறு,

(இந்த ராசிப்பலன்கள் யாவும் பொதுப்பலன்கள் ஆகும். ஒருவரின் ஜாதகத்தில் குரு பலமாகவோ, யோகம் தரும் இடத்தில் அமர்ந்து இருந்தாலோ தீய பலன்கள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும்)

தண்டபாணி ஆசிரமம் கணித்துள்ள குருபெயர்ச்சி பலன்கள்

மேஷம்    (போராட்டம் தரும் குரு)

3-ஆம் இடமான தைரியம், சகோதரம், வீரியம் ஆகிய ஸ்தானத்திற்கு குருபகவான் வருகிறார். 3-ஆமிடம் என்பது குருபகவானுக்கு ஏற்ற இடம் இல்லை. எதிலும் கவனம் தேவை.எதையும் நிறுத்தி நிதானமாக யோசித்து முடிவு எடுங்கள். தொழிலில் மந்த நிலை இருக்கும். பண வரவு தடைபடும்.புதிதாக பொன் பொருள் சேருவது கடினம். நோயின் தொல்லை, கடன் தொல்லை இருக்கும்.செலவுகள் அதிகரிக்கும்.எதிலும்
டென்ஷன் இருக்கும்.திருமணம் தள்ளி போகும்.கணவன்-மனைவிக்குள் பிரச்சனை ஏற்படும்.உடலில், மனதில் சோர்வு ஏற்படும். வேலை செய்யுமிடத்தில் பிரச்சனைகள் ஏற்படும். அலைச்சல் ஏற்படும்.பதவி உயர்வு, சம்பள உயர்வு தடைப்படும். தேவையற்ற விரும்பாத இடமாற்றம் இருக்கும்.

ஸ்ரீ நவக்கிரக எந்திரத்தை பூஜித்து வர சிரமங்கள் குறையும்.

தண்டபாணி ஆசிரமம் கணித்துள்ள குருபெயர்ச்சி பலன்கள்

ரிஷபம்: (பொற்காலம் தரும் குரு)

2-ஆம் இடமான தனம், குடும்பம், வாக்கு, லட்சியம் ஆகிய ஸ்தானத்தில் பொன்னவன் குருபகவான் சஞ்சரிக்கிறார். தொழிலில் நல்ல முன்னேற்றமும், லாபமும் ஏற்படும். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு, விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் ஆகியவை கிடைக்கும். நல்ல வேலை வாய்ப்பு, திருமண யோகம், புத்திரபேறு ஏற்படும். சிலர் வெளிநாடு செல்வீர்கள். பணம், பொன், பொருள், வாகனம் சேரும். சிலர் வீடு, மனை வாங்குவீர்கள். கடன் அடைபடும். குடும்பத்தில் உற்சாகமும் மகிழ்ச்சியும் ஏற்படும்.

ஸ்ரீ மஹாலட்சுமி எந்திரத்தை பூஜித்து வர நன்மைகள் மேலும் பெறுகும்.

தண்டபாணி ஆசிரமம் கணித்துள்ள குருபெயர்ச்சி பலன்கள்

மிதுனம்: (மன சஞ்சலம் தரும் ஜென்ம குரு)

ஸ்ரீ குருபகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு தான் வருகிறார்.எனவே இந்த குருபெயர்ச்சியால் உங்களுக்கு நன்மைகள் குறைவாகவும், தீமைகள் அதிகமாகவும் ஏற்படும். ஜென்ம குருவால் மனசஞ்சலம், வீண் அலைச்சல்,குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். தொழிலில் போட்டியும், பின்னடைவும் ஏற்படும். மேலதிகாரிகளின் பகை விரும்பத்தகாத இடமாற்றம், எதிலும் டென்சன் ஏற்படும். கடன் தொல்லை, உடல் சோர்வு, தொலை தூர பயணம் ஏற்படும். எதிலும் கவனமாக இருக்க வேண்டும்.

See also  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பந்தக்கால் நடப்பட்டது. நவம்பர் 29ந் தேதி மகாதீபம்

ஸ்ரீ நவக்கிரக எந்திரத்தை பூஜித்து வர துன்பங்கள் குறையும்.

தண்டபாணி ஆசிரமம் கணித்துள்ள குருபெயர்ச்சி பலன்கள்

கடகம்: (சுப செலவுகளை தரும் குரு)

12-ஆம் இடமான விரைய (செலவு) ஸ்தானத்தில் குருபகவான் சஞ்சரிக்கிறார். விரைய குருவால் உங்களுக்கு சுபசெலவுகள் ஏற்படும். உங்கள் வீட்டில் திருமண வைபோகமோ, வீடு கட்டுதலோ, வாகனம் வாங்குதலோ போன்ற நல்ல காரியங்களுக்கு செலவுகள் செய்ய நேரிடும். அதே சமயம் தொழிலில் பின்னடைவு, கடன் வாங்குதல், எதிரிகளின் தொல்லை, நோயின் தொல்லை, மருத்துவ செலவு வீண் சண்டை சச்சரவு, கோர்ட்டு கேஸ் வம்பு வழக்கு போன்ற தீய பலன்களும் ஏற்படும். ஒரு சிலர் வெளிநாடு செல்லக்கூடும். எது எப்படி இருந்தாலும் பணம் உங்கள்
கையைவிட்டு கரையும்.

ஸ்ரீ மஹாம்ருத்யுஞ்சய எந்திரத்தை பூஜித்து வர சிரமங்கள் குறையும்.

தண்டபாணி ஆசிரமம் கணித்துள்ள குருபெயர்ச்சி பலன்கள்

சிம்மம்: (லாப குரு)

11-ஆம் இடமான லாப ஸ்தானத்தில் தேவகுரு சஞ்சரிக்கிறார். தனக்காரனான குருபகவான் லாபம் தரும் இடத்தில் சஞ்சரிப்பதால் தனலாபம். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். தொழிலில் வெற்றி, நல்ல லாபம் கிடைக்கும். புதியதாக தொழில் தொடங்குவீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு ஏற்படும். வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். காதலில் வெற்றியும், திருமண யோகமும் அமையும். புத்திர சம்பத்து, வீடு மனை வாகன யோகம் அமையும். புகழ் செல்வாக்கு உயரும் குடும்பத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் ஏற்படும். கடன் அடைபடும். மொத்தத்தில் இந்த குருபெயர்ச்சியில் பலவித லாபங்களுடன் நன்மைகளும் பொருளாதார முன்னேற்றமும் ஏற்படும்.

ஸ்ரீ மஹாலட்சுமி எந்திரத்தை பூஜித்து வர நன்மைகள் பன்மடங்கு பெறுகும்.

தண்டபாணி ஆசிரமம் கணித்துள்ள குருபெயர்ச்சி பலன்கள்

கன்னி : (பதவியை பறிக்கும் குரு)

10-ஆம் இடமான தொழில், ஜீவன ஸ்தானத்திற்கு குருபகவான் பத்திலே குரு பதவியை பறிக்கும் என்ற ஜோதிட சொல்லுக்கு ஏற்ப தொழிலில் பல பிரச்சனைகள் ஏற்படும்… தொழிலில் நஷ்டம், பின்னடைவு ஏற்படும். கூட்டுத் தொழிலில் பிரச்சனைகள், கடன் தொல்லை, அவமானம், அவப்பெயர் ஏற்படும். உத்தியோகத்தில் செய்யாத குற்றத்திற்காக சஸ்பெண்ட் டிஸ்மிஸ் கூட நடைபெறும். பணமுடக்கம், வீண்
விரையம், வீடு, வாகனத்தால் செலவு, மருத்துவச் செலவு ஏற்படும். காதலில் தோல்வி, திருமணம் தள்ளி போகுதல் நடைபெறும். கணவன்- மனைவிக்குள் சண்டை சச்சரவு வரும். உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும்.

ஸ்ரீ மஹாம்ருத்யுஞ்சய எந்திரத்தை பூஜித்து வர துன்பங்கள் குறையும்.

தண்டபாணி ஆசிரமம் கணித்துள்ள குருபெயர்ச்சி பலன்கள்

துலாம்: (பாக்கியம் தரும் குரு)

9ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து தேவகுரு பிரகஸ்பதி உங்களை பார்வையிடப் போகிறார்.. குருபகவானின் பார்வையால் எல்லாவித நன்மைகளும் வரப்போகிறது. இந்த ஒன்பதாமிடத்தில் குருபகவான் நீங்கள் நினைத்ததை எல்லாம் நடத்தி வைக்கப் போகிறார். இந்த ஒரு வருடம் தங்களுக்கு பொற்காலமாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம், லாபம் ஏற்படும். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். பொன், பொருள், வாகனம் சேரும். சிலர் வீடு மனை வாங்குவீர்கள். தள்ளிப்போன திருமணம் கைகூடும். காதலில் வெற்றி, புத்திர சம்பத்து ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் ஏற்படும். தெய்வ தரிசனம் கிடைக்கும். நோய் கட்டுக்குள் அடங்கி இருக்கும்.

See also  திருவண்ணாமலை கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

ஸ்ரீ மஹாலட்சுமி எந்திரத்தை பூஜித்து வர நன்மைகள் மேலும் பல பெருகும்.

தண்டபாணி ஆசிரமம் கணித்துள்ள குருபெயர்ச்சி பலன்கள்

விருட்சிகம் : (தோல்வி, கஷ்டம் தரும் அஷ்டம குரு)

8-ஆம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் குருபகவான் அமர்வது நல்லதல்ல. எதிலும் கவனம் தேவை. எடுத்த செயல் எல்லாம் தோல்வியில் முடியும். எப்போதும் டென்ஷனாகவே இருப்பீர்கள். சோம்பல், தூக்கம், நோய் நொடி உங்களை ஆட்கொள்ளும். ஒரு சிலருக்கு பைத்தியம் பிடிக்காத குறைதான். மனதை தளரவிடாதீர். உண்மையான பக்தியின் மூலம் இந்த சோதனைகளை நீங்கள் வெல்லமுடியும். தொழிலில் மட்டுமல்ல, திருமணம், வேலைவாய்ப்பு என அனைத்திலும் இழுபறிதான். இந்த ஒரு வருடம் தங்களுக்கு மிகவும் சோதனை காலமாகும். வீண் செலவு ஏற்படும். உடல் நிலை கோளாறாமுட்புதர், அசுத்தங்கள் மத்தியில் சிவன் கோயில்ல் மருத்துவ செலவு ஏற்படும். கடன் தொல்லை, எதிரிகளின் தொல்லை அதிகரிக்கும்.

ஸ்ரீ நவக்கிரக எந்திரம் அல்லது ஸ்ரீ மஹாம்ருத்யுஞ்சய எந்திரத்தை பூஜித்துவர துன்பங்கள் குறையும்.

தண்டபாணி ஆசிரமம் கணித்துள்ள குருபெயர்ச்சி பலன்கள்

தனுசு : (வெற்றி மேல் வெற்றி தரும் குரு)

7-ஆம் இட இடமான களத்திரம், கூட்டுத்தொழில், மக்கள் சக்தி, திருமணம், காமம் ஆகிய ஸ்தானத்தில் குருபகவான் சஞ்சரிக்கிறார். குருபகவானின் பார்வை உங்களுக்கு கிடைத்திருக்கிறது. குருபகவானின் பார்வையில் அனைத்திலும் முன்னேற்றமும், வெற்றியும் உண்டாகும். தொழிலில் நல்ல முன்னேற்றமும் லாபமும் ஏற்படும். கூட்டுத்தொழிலில் சிறக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு, ஏற்படும். விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் கிட்டும். கணவன், மனைவி உறவு சிறக்கும். காதலில் வெற்றி உண்டாகும். திருமணம் கை கூடும். வீடு, வாகனம், பொன், பொருள், பணம் சேரும். சிலர் வெளிநாடு செல்வீர்கள். கோர்டு கேஸ் உங்களுக்கு சாதகமாக முடியும். எல்லா முயற்சிகளும் வெற்றியை தரும்.

ஸ்ரீ மஹாலட்சுமி எந்திரத்தை பூஜித்து வர நன்மைகள் பெருகும்.

தண்டபாணி ஆசிரமம் கணித்துள்ள குருபெயர்ச்சி பலன்கள்

மகரம்: (கடன், எதிர்ப்பு, நோய் மற்றும் தோல்விகளை தரும் குரு)

6-ஆம் இடமான கடன், எதிர்ப்பு, நோய் ஆகிய ஸ்தானத்தில் குருபகவான் அமர்வது அவயோகத்தை தரும். எதிலும் தோல்வி, பயம், எதிர்ப்பு ஏற்படும். கடன் தொல்லை நோயின் தொல்லை அதிகரிக்கும். தேவையில்லாத வீண் பிரச்சனைகள் வரும். பணம், பொருள் இழப்பு ஏற்படும். தொழிலில் பின்னடைவு, நஷ்டம் ஏற்படும். வீடு வாகனத்தால் செலவு, மருத்துவ செலவு, பிள்ளைகள் வகையில் செலவு என கையில்
வைத்திருக்கும் காசை கரைத்து விடும். புதிதாக கடன் வாங்க வேண்டி வரும். நகைகள் அடகு வைக்க நேரிடும். வேலை செய்யுமிடத்தில் பகை, எதிர்ப்பு உண்டாகும். மேலதிகாரிகளின் பகை உண்டாகும். சிலருக்கு சஸ்பெண்ட், மெமோ போன்றவை கிடைக்கும். செய்யாத குற்றத்திற்காக அவப்பெயர் ஏற்படும்.

See also  அண்ணாமலையார் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

ஸ்ரீ நவக்கிரக எந்திரத்தை பூஜித்து வர துன்பங்கள் குறையும்.

தண்டபாணி ஆசிரமம் கணித்துள்ள குருபெயர்ச்சி பலன்கள்

கும்பம்: (அதிர்ஷ்டம் தரும் குரு)

5-ஆம் இடத்திலிருந்து ஸ்ரீ குருபகவான் உங்களை பார்வையிடுகிறார். குருபகவானின் பார்வையாலும், பலத்தாலும் பல அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களை தேடி வரப்போகின்றன. எடுத்த முயற்சிகளில் எல்லாம் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்டலட்சுமி உங்களிடம் குடிக்கொள்வாள். பொன், பொருள், பணம், வீடு, வாகனம், மனை என சேரும். தொழிலில் நல்ல இலாபமும், வெற்றியும் கிடைக்கும். சிலர் புதிதாக தொழில் துவங்க நேரிடும். கடன் அடைப்படும். கோர்ட் கேஸ் வழக்குகளில் வெற்றி உண்டாகும். புகழ் செல்வாக்கு உயரும். மேலதிகாரிகளின் ஆதரவு, அரசு ஆதரவு கிடைக்கும். திருமணம் கைகூடும். காதலில் வெற்றி, குழந்தை பாக்கியம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் அதிகரிக்கும்.

ஸ்ரீ மஹாலட்சுமி எந்திரத்தை பூஜித்து வர நன்மைகள் மேன்மேலும் பெருகும்.

தண்டபாணி ஆசிரமம் கணித்துள்ள குருபெயர்ச்சி பலன்கள்

மீனம்: (நடு நிலை தரும் குரு)

4-ஆம் இடமான வீடு, நிலம், மனை, வாகனம் ஆகிய சுகஸ்தானத்தில் குருபகவான் சஞ்சரிக்கிறார். 4-ஆம் இடம் குருபகவானுக்கு கோட்சாரப்படி ஏற்ற இடம் இல்லை என்றாலும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்த மாட்டார். அதே சமயம் நல்லதையும் செய்யமாட்டார். ஆனால், எதிலும் மந்த நிலை இருக்கும். பண வரவில் மந்த நிலை, தொழிலில் மந்த நிலை என அனைத்து முயற்சிகளிலும் மந்தநிலை இருக்கும். வீடு, வாகனம், நிலம், மனை போன்றவற்றில் செலவுகள் ஏற்படும். தேவையற்ற விரும்பாத இடமாற்றம் ஏற்படும். பதவி உயர்வு, சம்பள உயர்வு இழுபறியில் இருக்கும். தொலைதூர பயணம் ஏற்படும். 7½ ஆண்டு சனிபகவானின் தொல்லையும் இருக்கும்.

ஸ்ரீ நவக்கிரக எந்திரத்தை பூஜித்து வர மந்த நிலை நீங்கி சில நன்மைகள் நடக்கும்.


குறிப்பு– இந்த ராசிப்பலன்கள் யாவும் பொதுப்பலன்கள் ஆகும். ஒருவரின் ஜாதகத்தில் குரு பலமாகவோ, யோகம் தரும் இடத்தில் அமர்ந்து இருந்தாலோ தீய பலன்கள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும் என்பதை வாசகர்கள் தெரிந்து கொள்ளவும்.


தண்டபாணி ஆசிரமம் கணித்துள்ள குருபெயர்ச்சி பலன்கள்தொகுப்பு : “ஜோதிட ரத்னா” “ஆன்மிக செம்மல்”
சித்தர் மகன். Dr.L.சீனுவாசன், M.A.,D.A.,S.M.P., நிறுவனர் மற்றும் செயலாளர், ஸ்ரீதண்டபாணி ஆஸ்ரம வாலைச்சித்தர் அறக்கட்டளை.

 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!