26-4-2025 அன்று ராகு பகவான் மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கும்,கேது பகவான் கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சி ஆகி உள்ளார். 11-5-2025 பகல் 1-19 மணிக்கு குருபகவான் மிதுன ராசிக்கு செல்கிறார். இந்த 2 பெயர்ச்சிகளும் மேஷம், ரிஷபம், மிதுனம் ஆகிய ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம்.
மேஷ ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 2-ல் சஞ்சரித்து வந்த குரு பகவான் வரும் 11/5/2024 முதல் 3-ஆம் இடத்திற்கு பெயர்ந்து அங்கிருந்து அவர் 7,9,11 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். சனி பகவான் 11 இல் அமர்ந்து 1, 5, 8 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். ராகு கேதுக்கள் 26/4/2025 முதல் 11, 5 ஆகிய இடங்களுக்கு பெயர்ந்து தத்தம் இடங்களை மாறி பார்வையிடுகின்றனர்.
இந்த கிரக அமைப்புகள் உங்கள் ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி காலத்தில் எவ்விதமான பலன்களை தரும் என்று பார்ப்போம் வாருங்கள்!!
உங்களது உடல் ஸ்தானத்தை பொருத்தவரை சனி பகவான் அருளால் உங்களது தேகம் பொலிவு பெறும். இந்த குரு பெயர்ச்சியானது உடல் நிலையில் சற்று மந்தமான பலன்களை எதிர்பார்க்கக் கூடியதாக இருக்கும். ஆயுள் பாவம் நன்றாக இருக்கும். குருவின் பார்வை பலன்கள் அற்புதமான இடங்களுக்கு விழுவதால் மனதில் இருக்கும் கவலைகள் மற்றும் உபாதைகள் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது.
உங்கள் ராசிக்கு ராகு பகவான் 11 இல் அமர்வதால் வீட்டில் இருக்கும் முதியோர்களை சரியாக பார்த்துக் கொள்ள வேண்டும். உங்களது தனஸ்தானத்தை பொருத்தவரை பொருளாதாரம் என்பது இந்த வருடம் சிறப்பாகவே இருக்கும். கொடுக்கல் வாங்கல் சீராக செல்லும். அதேசமயம் 2026 முதல் உங்களுக்கு விரையச்சனி காலமாகையால் எதிலும் எச்சரிக்கையோடு நடந்து கொள்ள வேண்டும்.
குறிப்பாக கையெழுத்து போடுவதில் எச்சரிக்கை தேவை. உங்கள் வாக்கு ஸ்தானத்தை பொருத்தவரை யாருக்கும் எந்த நிலையிலும் ஜாமீன் கூற வேண்டாம் அல்லது ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். நாம் வாய் வார்த்தைகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குடும்பஸ்தானத்தை பொருத்தவரை தந்தை வழி உறவுகளிடம் எச்சரிக்கையாக பழக வேண்டும்.
குடும்பத்தில் பணத்தொந்தரவு என்பது இருக்காது. ஆனால் மனத்தொந்தரவு கண்டிப்பாக இருக்கும். உங்களது தைரிய ஸ்தானத்தை பொருத்தவரை இங்கு குரு பகவான் அமர்ந்து உள்ளார். இயற்கையிலே உடல் பலம் மிகுந்த உங்களுக்கு வரும் வருடம் மனசோர்வுகள் அதிகமாகி உடல் வலிமை இழக்க நேரிடும். ஆகவே தகுந்த ஆன்மீக வழிபாடு. யோகசனங்கள் வழிபாடு தேவை.
உங்களது தாய் ஸ்தானத்தை பொருத்தவரை தாயின் ஆயுள் நன்றாக இருக்கும். அதே சமயம் உடல் நிலையில் எச்சரிக்கை தேவை. வயது முதிர்ந்த நபர்கள் வீட்டில் இருப்பின் மிகுந்த எச்சரிக்கை தேவை. தாய்- மகன் உறவு சீராக இருக்கும். உங்களது வீடு, மனையை பொறுத்த வரை இவ்வருடம் சாதிக்க வேண்டியதை சாதித்துக் கொள்ளுங்கள்.
2026 முதல் உங்களுக்கு ஏழரை சனி ஆரம்பமாகிறது என்பதை கவனத்தில் கொள்ளவும். உங்களது வண்டி வாகனத்தை பொருத்தவரை சனி, ராகு சேர்க்கையானது சில விதத்தில் தொந்தரவுகளும் பலவிதத்தில் நன்மைகளும் தரும் என்பதால் எதையும் ஆராய்ந்து செய்ய வேண்டும். புதிய வாகனங்கள் வாங்குவதை வரும் ஆறு வருட காலத்திற்கு தள்ளிப் போடவும்.
உங்களது பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது பகவான் அமர்ந்து பரிபாலனம் செய்கிறார். குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் அவசியமாகும். நீங்கள் எத்தனை தெய்வங்களை வழிபட்டு வந்தாலும் குலதெய்வத்தின் ஆதரவு இருந்தால்தான் வாழ்க்கையில் ஏற்படும் தடங்கல்கள் மற்றும் தீமையான பலன்களை குறைக்க முடியும்.
உங்களது புத்திர பாக்கியத்தை பொருத்தவரை குழந்தைப்பேறு இல்லாதவர்கள் சற்று காலம் பொறுத்து இருக்க வேண்டும். ஐந்தில் பாம்பு இருந்தால் நாகதோஷ பரிகாரம் செய்து கொள்வது நல்லது. மேலும் உங்கள் புத்திரர்களின் உடல்நிலை, மனநிலை சற்று மந்தமாகவே இருக்கும். குழந்தைகள் விஷயத்தில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.
உங்களது கடன் ஸ்தானத்தை பொருத்தவரை ராகு பகவான் 11-ல் அமர்வதால் பணம் வந்து கொண்டே இருக்கும். ஆனால் பணம் எவ்வழியில் வருகிறது என்பதை யோசித்துப் பார்த்து வேண்டும். ராகு கொடுப்பது போல் கொடுத்து, வரும் காலங்களில் எடுத்து விடுவார் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
உங்களது உடல் நிலையை பொறுத்த வரை நரம்பு. கை, கால் வலி மற்றும் மனவலி போன்றவை உருவாகும். தகுந்த எச்சரிக்கை தேவை. உங்களது திருமண பாவத்தை பொறுத்த வரை குருவின் பார்வை இங்கு விழுகின்றது. ஆகவே உங்களுக்கு குரு பலம் இல்லாவிட்டாலும் குரு பார்வை இருப்பதால் சிலருக்கு திருமணங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உண்டு.
ஜாதகத்தில் திருமண தோஷம் இருப்பவர்கள் தகுந்த பரிகாரங்களை செய்து கொள்ளவும். கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்ய முடியாதவர்கள் எங்களிடம் கிடைக்கும் ஸ்வயம்வரா பார்வதி எந்திரத்தை வாங்கி வழிபட்டு வந்தால் திருமணம் இனிதே நடக்கும். திருமணம் ஆன தம்பதியர்களுக்கு மத்தியில் இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் மறைந்து ஒரு சுமுகமான சூழ்நிலை ஏற்படும். அதே சமயம் சுற்றி இருப்பவர்களால் ஏதாவது பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு உண்டு. ஜாக்கிரதையாக இருக்கவும்.
உங்களது ஆயுள் மற்றும் மாங்கல்ய ஸ்தானத்தை பொருத்தவரை சனி பகவான் நேரடி பார்வை விழுவதால் ஆயுள்பலம் நன்றாக இருக்கும். அதே சமயம் மாங்கல்ய ஸ்தானத்திற்கு சனி பார்வை விழுவது அவ்வளவு நல்லதல்ல. ஆகவே வீட்டில் இருக்கும் பெண்கள் சனிக்கிழமை தோறும் விநாயகர், பைரவர், மற்றும் அனுமனை வணங்கி வர சிக்கல்கள் தீரும்.
உங்கள் சத்ரு பாவத்தை பொறுத்தவரை எதிரிகள் என்பவர்கள் யாரும் உங்களுக்கு கிடையாது. அதேசமயம் உங்களுக்கு எதிராக உருவாக்கப்படுவார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவும். ஆகவே கூடவே இருப்பவர்களை சற்று கவனித்து வரவும்.
உங்களது பாக்கியஸ்தானத்தை பொருத்தவரை இங்கு குரு பகவானின் அருட்பார்வை விழுகிறது. ஆகவே உங்களுக்கு குரு 3ல் மறைந்தாலும் அற்புதமான பலன்களை நிச்சயம் நிகழ்த்துவார். உங்களது தந்தையாரின் ஆயுள் பாவம் நன்றாக இருக்கும். தந்தை- மகன் உறவு முறை சீர் பெறும் காலமாகும்.
தந்தை சார்ந்த சொத்துக்கள் மூலம் பெரும் தனம் வர ஏதுவாகும். உங்களது உயர் கல்வி ஸ்தானத்தை பொருத்தவரை அருமையான நேரமாகும். தடைப்பட்ட கல்வியை தாராளமாக தொடர முடியும்.
உங்களது ஜீவனஸ்தானத்தை பொருத்தவரை விவசாயத் துறையினருக்கு விளைச்சல் மிதமாகவும், மருத்துவத்துறை சார்ந்தவர்களுக்கு எதிர்பாராத முன்னேற்றமும், இரும்பு சம்பந்தப்பட்ட துறையினருக்கு ஏற்றம் ஏற்படுதலும், சுயதொழில் புரிவோருக்கு அரசாங்க கடன் உதவிகளும், கலைத்துறை சார்ந்தவர்களுக்கு அதிக வாய்ப்புகளும், அரசு மற்றும் தனியார் துறையில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத இடமாற்றமும் ஏற்படும். வேலை இல்லாதவர்களுக்கு வேலைக்கு செல்வதற்கான பணி ஆணைகள் கிடைக்கப் பெறுவார்கள்.
உங்களது லாப ஸ்தானத்தில் சனி மற்றும் ராகு அமர்ந்துள்ளனர். பாவ கிரகம் 11 அமர்ந்தால் நன்மையான பலன்களே நடைபெறும். ஆனால் சனி மற்றும் ராகு இணைவு என்பது சற்று பின்னடைவு ஏற்படுத்தக்கூடியது. உங்களது முன் ஜென்ம வினை மற்றும் உங்களது பாவ புண்ணிய கணக்கின் அடிப்படையிலே இந்த ஸ்தானம் வலுப்பெறும். நீங்கள் உங்களது மனசாட்சிக்கு பயந்து நடந்திருந்தால் அற்புதமான பலன்களை இவ்விரு கிரகங்களும் இணைந்து கொடுப்பார்கள்.
நீங்கள் செய்த நற்காரியங்களை ஒரு தடவை திரும்பிப் பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு நன்மை கிடைக்கும். ஒருவேளை உங்களது மனசாட்சிக்கு விரோதமாக நடந்து இருந்தால் தீமையான பலன்களே லாபமாக கிடைக்கும். உங்களது அயன, சயன பாவத்தை பொருத்தவரை சனி, ராகு ஆகிய இரு கிரகங்களும் நல்ல பலத்துடன் அமர்ந்துள்ளனர்.
குரு, கேது ஆகிய கிரகங்கள் பலம் இல்லாத சூழ்நிலையில் உள்ளது. ஆகவே உங்கள் வாழ்க்கையில் இந்த வருடம் இந்த குரு பெயர்ச்சி காலத்தில் 50% சுப பலன்கள் ஏற்படும். பதற்றம், படபடப்பு போன்றவைகளை குறைத்து மனதை ஒருநிலைப்படுத்தி உறுதியான நெஞ்சுரம் கொண்டு வருங்காலத்தை உங்கள் ராசி அதிபதி செவ்வாயின் அதிதேவதையான முருகப் பெருமான் துணை கொண்டு வாழ்க்கையை செவ்வனே நடத்தி வர எல்லையில்லா செல்வங்கள் வந்தடையும். நல்லதே நடக்கும்! வாழ்க வளமுடன்.
பரிகாரம் : திட்டை, ஆலங்குடி, பட்டமங்கலம் சென்று குரு வழிபாடு செய்வதும், திருப்பாம்புரம், கீழப்பெரும்பள்ளம், காளகஸ்தி சென்று கேது பகவானுக்கு பிரீதி செய்வதும், அனாதை குழந்தைகளுக்கு வஸ்திரதானம் செய்வதும், கால்நடைகளுக்கு தீவன தானம் செய்வதும், ஜீவ சமாது தரிசனமும், நாங்கள் 18/5/2025 இல் ஏற்பாடு செய்துள்ள மகா நவகிரக பரிகார ஹோமத்தில் கலந்து கொள்வதும் மிகச் சிறந்த பரிகாரங்கள் ஆகும்.
ரிஷப ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு ஜென்மத்தில் சஞ்சரித்த குரு பகவான் வரும் 11/5/2025 முதல் 2-ம் இடம் பெயர்ந்து பலன் தர உள்ளார். அவர் அங்கிருந்து 6,8,10 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். சனி பகவான் 10-ல் அமர்ந்து 12,4,7 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். இராகு, கேதுக்கள் வரும் 26/4/2025 முதல் 10, 4 இடங்களுக்கு பெயர்ந்து தத்தம் இடங்களை மாறி பார்வையிடுகின்றனர்
இந்த கிரக அமைப்புகள் உங்கள் ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி காலத்தில் எவ்வித பலன்களை தரும் என்று பார்ப்போம் வாருங்கள்!
உங்களது உடல் ஸ்தானத்தை பொருத்தவரை இந்த இடத்தில் இருந்த குரு பகவான் விலகி தன குடும்ப வாக்கு ஸ்தானத்திற்கு சென்றுவிட்டார். மனதில் இருந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் ஒரு முடிவு காலம் ஏற்படும் காலமாகும். மனதில் தைரியம் கூடும். கடந்த சில மாதங்களாக உங்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்பட்டு அவைகள் எல்லாம் நீங்க கூடிய காலம் நெருங்கி விட்டது.
வரும் மூன்று வருட காலத்திற்கு உங்கள் வாழ்க்கையில் வசந்தம் வீசும் என்பதால் உடல் நிலையிலும், மனநிலையிலும் நல்லதொரு தாக்கம் ஏற்படும். அனுபவி ராஜா அனுபவி!! உங்களது தன ஸ்தானத்தை பொருத்தவரை தனரீதியாக கடந்த காலங்களில் ஓரளவு பொருளாதாரம் வந்து கொண்டே இருந்தது. ஆனால் அதற்கு ஏற்ப அதிகப்படியான வேலை பளுவும் இருந்து வந்தது. வரும் காலத்தில் வேலை பளு குறைந்து நிதானமான வாழ்க்கைக்கு திரும்பி விடுவீர்கள்.
உங்களது வாக்கு ஸ்தானத்தை பொருத்தவரை மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அனைவரையும் எடை போட கற்றுக் கொண்டீர்கள். இனிமேல் கடந்த கால அனுபவத்தை சார்ந்து முடிவு எடுத்துக் கொள்ள வேண்டும். உங்கள் குடும்பத்தை பொறுத்தவரை குடும்பத்தில் உள்ள குழப்பங்களுக்கு விடிவு காலம் வந்துவிட்டது. அருமையான நேரம் ஆகும். குடும்பத்தில் உள்ள அனைவரின் ஒப்புதலோடு அனைத்து காரியங்களும் நல்லபடியாக நடக்கும்.
உங்களது தைரிய, சகோதர ஸ்தானத்தை பொருத்தவரை இந்த இடமானது வளம் பெறக்கூடிய சூழ்நிலையில் உள்ளதால் தைரியம் கூடும். தன்னம்பிக்கை வளரும். எடுத்த காரியங்களை இனிதே முடிப்பீர்கள். உங்களது சகோதர பாவத்தை பொறுத்தவரை அவர்களிடம் பேதம் பார்க்காமல் நடந்து கொள்ள வேண்டும். அனுசரித்து நடந்து கொள்ள கற்றுக் கொள்ளுங்கள்.
உங்களது தாய் ஸ்தானத்தை பொருத்தவரை இங்கு கேது பகவான் அமர்ந்துள்ளதால் தாயின் ஆயளுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு இல்லை. ஆனால் உடல் நிலையில் நிச்சயம் பாதிப்பு ஏற்படும். வயது முதிர்ந்தவர்கள் இருந்தால் தக்க கவனமான நடவடிக்கை எடுத்துக் கொள்ளவும். தாய்- மகன் உறவு சீராக இருக்கும். தாயால் சிலர் ஆதாயம் அடைய கூடிய சூழ்நிலையும் உண்டு.
உங்களது வீடு, மனையை பொறுத்தவரை ஓரளவு நன்றாகவே உள்ளது. இருந்தபோதிலும் கேது இங்கு அமர்ந்து இருப்பது சற்று முரண்படான விளைவுகளை கொடுக்கும். ஒரு சிலருக்கு வில்லங்கமான இடங்கள் விலை போகும் நேரமாகும். உங்கள் பெயரில் புதிய வீடு கட்டுவதற்கு அல்லது மனை வாங்குவதற்கு இது உகந்த காலம் அல்ல.
ஆனால் மனைவியின் பெயரில் வாங்கிக் கொள்ளலாம். உங்களது வண்டி, வாகனத்தை பொறுத்த வரை ஜாக்கிரதையுடன் இருப்பது மிகவும் நல்லது. கேது இவ்விடத்தில் அமர்ந்திருப்பதால் வாகனத்தில் செல்லும் பொழுது சரியான மனநிலையை ஏற்படுத்திக் கொள்ளவும்.
ஸ்ரீ காளியம்மனை வணங்கி வர கலக்கம் நீங்கும். உங்களது பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பொருத்தவரை தற்சமயம் இந்த இடம் சற்று பலவீனபட்டுள்ளது. ஆகவே குலதெய்வ கோவிலுக்கு சென்று அபிஷேக, ஆராதனை செய்து வரவும். பாவம் குறையும். புண்ணியம் கூடும். உங்களது புத்திர ஸ்தானத்தை பொறுத்தவரை அவர்களின் நிலையில் சற்று கவனமாக இருப்பது நல்லது. அவர்கள் மன நிலையில் சற்று பலவீனம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. ஆகவே அவர்களை கவனமுடன் வழிநடத்தவும்.
உங்களது ஆயுள் பாவத்தை பொறுத்தவரை ஆயுள் நன்றாக உள்ளது. உங்களது கடன் ஸ்தானத்தை பொறுத்தவரை குருபகவானின் பார்வை படுவதால் கடன் கட்டுக்குள் வந்தாலும் கடன் வாங்குவதற்குரிய சூழ்நிலை ஏற்படும். கவனமுடன் இந்த விஷயத்தை கையாளவும். ஆனால் கடன்களால் எந்த பாதிப்பும் ஏற்படாது. உங்கள் உடல் ஸ்தானத்தைப் பொறுத்தவரை வெப்பம் சம்பந்தப்பட்ட அமைப்புகளாலும், கண் மற்றும் நரம்புகளாலும் பாதிப்பு ஏற்படும். தக்க மருத்துவ ஆலோசனைகளை எடுத்துக் கொள்ளவும்.
உங்களது திருமண பாவத்தை பொருத்தவரை இங்கு சனி பார்வை விழுவதால் உங்களுக்கு குரு பலம் இருந்தாலும் சனியின் பார்வையால் தடை ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு. திருமணஞ்சேரி சென்று திருமண மாலை வாங்கி வந்தால் தடையில்லாமல் இல்லாமல் திருமணம் நடக்கும். ஜாதகத்தில் திருமண தோஷம் உள்ளவர்கள் தக்க பரிகாரங்களை செய்து கொள்ளவும். எங்களிடம் கிடைக்கும் திருமண தோஷ நிவர்த்தி யந்திரத்தை வாங்கி பூஜை செய்து வந்தால் திருமணம் நடக்கும்.
உங்கள் ஆயுள் ஸ்தானத்திற்கு குரு பகவான் பார்வை படுவதால் ஆயுளுக்கு எந்த குறைவும் இல்லை. மாங்கல்ய ஸ்தானத்திற்கும் எந்த இடையூறும் இல்லை. மேலும் சத்ரு பாவமானது தவிடு பொடியாக கூடிய சூழ்நிலை உள்ளதால் நிமிர்ந்து நின்று வாழ்க்கையை வழி நடத்திச் சொல்லுங்கள்.
உங்களது பாக்கியஸ்தானத்தை பொருத்தவரை குருவின் அருளால் இந்த இடம் சீர் பெற ஆரம்பிக்கும். தந்தையின் ஆயுள் பாவம் நன்றாக உள்ளது. தந்தை- மக்கள் உறவு வலுப்பெறக்கூடிய காலமாகும். தந்தை வழி சொத்துக்களால் ஆதாயம் அடைய முடியும். தந்தையாருக்கு சளி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும், இருதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் ஏற்பட்டு நீங்கும்.
உங்களது உயர் கல்வி ஸ்தானத்தை பொருத்தவரை தடைபட்ட கல்வியை தடை இன்றி தொடர முடியும். ஒரு சிலருக்கு மேல் படிப்பிற்காக அயல் மாநில அல்லது அயல் தேச வாசம் உருவாகும்.இந்த பாவம் நன்றாக உள்ளது.
உங்களது ஜீவனஸ்தானத்தை பொருத்தவரை இங்கு சனி, ராகு இருவரும் அமர்ந்துள்ளனர். ஆகவே விவசாயத் துறையினருக்கு விளைச்சல் சுமாராகவும், மருத்துவத்துறையினருக்கு ஏமாற்றம் மிகுந்த காலமாகவும், ,ரும்பு சம்பந்தப்பட்ட துறையினருக்கு காலம் கை கொடுப்பதும், சுயதொழில் புரிவோருக்கு சுணக்கம் நீங்குதலும், கலைத்துறை சார்ந்தவர்களுக்கு காலம் கை கொடுப்பதும், அரசு மற்றும் தனியார் துறையில் உள்ளவர்களுக்கு வேலை பளு அதிகமாதலும் நடக்கும்.
வேலை இல்லாதவர்களுக்கு சிரமத்தின் பேரில் வேலை கிடைக்கும். வேலைக்காக கொஞ்சம் பணம் செலவு செய்ய வேண்டி வரும். உங்களது லாப ஸ்தானத்தை பொருத்தவரை இந்த குரு பெயர்ச்சி காலத்தில் லாபம் என்பது சுமாராகவே உள்ளது. ஆனால் வரும் காலத்தில் அபரிதமான லாபத்தை நுகர இருக்கின்றீர்கள்.
மனரீதியாக, குடும்ப ரீதியாக, பணரீதியாக அனைத்தும் உங்களுக்கு சாதகமாக கூடிய சூழ்நிலை உள்ளதால் தைரியத்துடன் அனைத்து சவால்களையும் எதிர்கொள்ளுங்கள்.
உங்களது அயன, சயன ஸ்தானத்தை பொருத்தவரை இவ்விடம் சனியின் பார்வை படுகின்றது. ஆகவே மிகுந்த ஜாக்கிரதையுடன் இந்த வருடத்தை கழிக்க வேண்டும். குரு ஒருவரே உங்களுக்கு சாதகமாக உள்ளார். சனி, ராகு, கேது ஆகியோர் சாதகமற்ற சூழ்நிலையில் உள்ளார்கள்.
இருந்தபோதிலும் சனியின் நகர்வு அடுத்த வரக்கூடிய காலங்களில் பிரகாசமான காலத்தை வழங்குவதால் உங்களுக்கு 80 % நற்பலன்கள் நடைபெறும். உங்கள் ராசி அதிபதி சுக்கிரனின் அதி தேவதையான மகாலட்சுமியை வழிபட்டு வர மங்களங்கள் பெருகும். நல்லதே நடக்கும்! வாழ்க வளமுடன்!!
பரிகாரம் : திருநள்ளாறு, குச்சனூர், ஏரி குப்பம் சென்று சனி பிரீதி செய்வதும், திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம், திருப்பாம்புரம், காளகஸ்தி சென்று ராகு, கேதுவை வழிபட்டு வருவதும், முதியோர்களுக்கு குடை தானம் வழங்குவதும், அனாதை குழந்தைகளுக்கு எழுதுகோல் வழங்குவதும், நூல்களில் கோளறு பதிகத்தை பாராயணம் செய்வதும், நாங்கள் 18/5/2025 ல் ஏற்பாடு செய்துள்ள மகா நவகிரக பரிகார ஹோமத்தில் கலந்து கொள்வதும் மிகச் சிறந்த பரிகாரங்கள் ஆகும்.
மிதுன ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 12-ல் சஞ்சாரம் செய்து வந்த குரு பகவான் வரும் 18/5/2025 முதல் ஜென்ம ராசிக்கு பெயர்ந்து பலன் தர உள்ளார். அவர் அங்கிருந்து 5,7,9 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். சனி பகவான் 9-ல் அமர்ந்து 11,3,6 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். இராகு. கேதுக்கள் வரும் 26/4/2025 முதல் 9,3 ஆகிய இடங்களுக்கு பெயர்ந்து தத்தம் இடங்களை மாறி பார்வையிடுகின்றனர்.
இந்த கிரக அமைப்புகள் உங்கள் ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி காலத்தில் எவ்வித பலன்களை வழங்கும் என்று பார்ப்போம் வாருங்கள்!
உங்களது உடல் ஸ்தானத்தை பொருத்தவரை சற்று தெருக்கடியான நிலையே காணப்படுகிறது. புதன் வீட்டில் குரு அமர்வதென்பது உடம்பை ஒரு பாடாய்ப் படுத்தி விடும். உடல் அமைப்பில் குருவானவர் முகத்திற்கும், புதனானவர் நரம்பு சம்பந்தப்பட்ட அமைப்புக்கும் காரகமாவதால் இந்த இரு இடங்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் வந்து நீங்கும். ஒரு சிலருக்கு முகம் இருண்டு போய் காணப்படும். ஆனாலும் தைரியத்தை இழந்து விட வேண்டாம்.
வரக்கூடிய இந்த குரு பெயர்ச்சி காலமானது மனநிலையில் ஒரு மாற்றத்தை நிச்சயமாக கொண்டு வரும். அவர் பார்க்கும் இடங்களில் அருமையான பலன்களை தருவதால் நிச்சயம் உங்கள் வாழ்க்கை பிரகாசிக்கும். உங்களை நீங்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களது தனஸ்தானத்தை பொறுத்த வரை ‘வரவு எட்டணா செலவு பத்தணா’ என்ற சூழ்நிலை ஏற்படும்.
வரும் வருமானத்தை சிக்கனமாக செலவு செய்து கொள்ள முயற்சிக்க வேண்டும். உங்களது வாக்கு ஸ்தானத்தை பொருத்தவரை கவனமுடன் இருப்பது நல்லது. மேலும் யாருக்கும் எந்த நிலையிலும் ஜாமீன் கூறவோ அல்லது நிற்பதோ கூடாது. உங்களது குடும்பத்தை பொருத்தவரை சற்று தடைகள் ஏற்படும் காலமாகும். இருந்தபோதிலும் குருவின் பார்வையால் அனைத்தும் சுபமாகவே முடியும்.
ஒரு தீபம் அணையும் பொழுது பிரகாசமாக எரிவதைப் போல் உங்கள் குடும்பப் பிரச்சனைகள் பிரகாசமாக வெடித்து பின் தவிடு பொடி ஆகிவிடும். உங்களது தைரிய ஸ்தானத்தை பொறுத்த வரை இங்கு சனியின் 7ம் பார்வை விழுகிறது. ஆகவே தைரியம் குறையும் காலமாகும். யோகா, ஆன்மீகம் போன்ற வழிகளில் மனதை செலுத்தவும்.
உங்களது சகோதர, சகோதரி வர்க்கத்தை பொறுத்த வரை பிணக்குகள் ஏற்பட வாய்ப்புள்ளது .தகுந்த சமயோஜித புத்தியை கையாளவும். மேலும் அவர்களுடன் இணக்கமாக செல்வது மிகவும் நல்லது. உங்கள் தாய் ஸ்தானத்தை பொருத்தவரை தாயின் ஆயுளுக்கு பங்கம் இல்லை. தாயின் உடல்நிலையில் கை, கால், முட்டி சம்பந்தப்பட்ட இடங்களில் வலியும், நரம்புக் கோளாறுகளும் ஏற்படும். தாய் -மக்கள் இடையே உறவு| நிலை சீர் பெரும். தாயால் சிலர் ஆதாயம் அடைவீர்கள்.
உங்களது வண்டி, வாகன ஸ்தானத்தை பொருத்தவரை சற்று காலம் பொறுத்து இருக்க வேண்டும். இந்த வருடம் கழித்து அடுத்த வருடம் புதிய வாகனங்கள் வாங்குவதற்கு ஏதுவாக இருக்கும். இவ்வருடத்தில் வாகன பயணகங்களில் எச்சரிக்கை தேவை.
உங்களது பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பொருத்தவரை இவ்விடத்திற்கு குரு பார்வை விழுவதால் மிகவும் நன்றாக உள்ளது. உங்கள் வாழ்க்கையில் ஜென்ம குருவால் ஏற்படும் தீவினைகளை களைய இந்தப் பார்வை பலம் உங்களை பிரகாசிக்க வைக்கும். உங்கள் புத்திர ஸ்தானத்தை பொருத்தவரை நீண்ட நாட்களாக புத்திர பேறு இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் உருவாகும். புத்திர தோஷம் உள்ளவர்கள் எங்களிடம் கிடைக்கும். குரு எந்திரத்தை வாங்கி வழிபட்டு வந்தால் நிச்சயம் புத்ரபாக்கியம் கிட்டும்.
உங்கள் குழந்தைகளின் கல்வி நிலை, உடல்நிலை நன்றாக உள்ளது. உங்களது கடன் ஸ்தானத்தை பொறுத்தவரை இவ்விடத்திற்கு சனி பகவானின் பார்வை விழுவதால் கடன்கள் கட்டுக்குள் வரும். பழைய கடன்களை பைசல் செய்வதற்கு உண்டான ஏற்பாடுகள் நடைபெறும் காலமாகும். உங்களது உடல் நிலையை பொறுத்த வரை மறைவிட உறுப்புகள், சூடு, கபம், சளி போன்றவற்றால் நோய் தாக்கங்கள் ஏற்பட்டு நீங்கும்.
உங்களது திருமண பாவத்தை பொருத்தவரை இவ்விடத்திற்கு குரு பார்வை விடுவதால் ஒரு சிலருக்கு பார்வை பலத்தால் திருமணம் கைகூடும். ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்கள் தகுந்த பரிகாரங்கள் செய்து கொள்ளவும். அல்லது எங்களிடம் கிடைக்கும் ஸ்வயம்வரா பார்வதி யந்திரத்தை வாங்கி வழிபட்டு வந்தால் நல்லதே நடக்கும்.
திருமணம் ஆன தம்பதியர்களுக்கு மத்தியில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். குருவின் பார்வை இங்கு விழுவதால் பெரிய பிரச்சனைகள் ஏதும் இருக்காது. உங்களது மாங்கல்ய ஸ்தானத்தை பொருத்தவரை இவ்விடத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. அதேசமயம் கணவன், மனைவி வாய் வார்த்தைகளில் கவனம் தேவை.
ஒரு சில சமயங்களில் நாம் வெளியிடும் வாய் வார்த்தைகளே சச்சரவுகளுக்கு வழி வகுக்கும். உங்கள் ஆயுள் பாவம் நன்றாக உள்ளது. உங்கள் சத்ரு பாவமானது சனியின் அமைப்பால் பலவீனப்படும் நேரம் ஆகும். ஆகையால் எதையும் எதிர்பார்க்காமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்து விட்டால் எந்த பிரச்சனையும் நமக்கு வராது.
உங்களது பாக்கியஸ்தானத்தை பொருத்தவரை இங்கு சனி, ராகு ஆகிய இரு கிரகங்கள் அமர்ந்துள்ளனர். ஆகவே தந்தையாரின் உடல் நிலையில் எச்சரிக்கை தேவை. தந்தை நோய்வாய்ப்படக் கூடிய சூழ்நிலை உருவாகும். இனம் புரியாத நோய்களால் பாதிப்பு ஏற்படும். தந்தை-மக்களிடையே பாசப்பணைப்பு உருவாகும். இருந்தபோதிலும் சனி, ராகு சேர்க்கையானது தந்தையின் மனநிலையில் சில சலனங்களை ஏற்படுத்தும்.
உங்களது உயர் கல்வி ஸ்தானத்தை பொருத்தவரை சற்று சிரமேற்கொண்டு படிக்க முயல வேண்டும். ராகுவின் அமைப்பால் சிலரின் படிப்புக்கு தடை ஏற்படும். துர்க்கை வழிபாடு செய்து வந்தால் நல்லது நடக்கும்.
உங்களது ஜீவனஸ்தானத்தை பொருத்தவரை விவசாயத் துறையினருக்கு விளைச்சல் மந்தமாகவும், மருத்துவத்துறையினருக்கு மாற்றங்கள் நிகழும் நேரமாகவும், இரும்பு சம்பந்த பட்டத்துறையினருக்கு இறுக்கமான சூழ்நிலையும், சுயதொழில் புரிவோருக்கு சுணக்கம் ஏற்படுதலும், கலைத்துறை சார்ந்தவர்களுக்கு காலம் கைவிடுவதும், அரசு மற்றும் தனியார் துறையில் உள்ளவர்களுக்கு வேலை பளு அதிகமாதலும், வேலையில்லாதவர்களுக்கு சிரமத்தின் பேரில் வேலையும் கிடைக்கும்.
உங்களது லாப ஸ்தானத்தை பொறுத்த வரை இங்கு சனி பகவான் பார்வை விழுகின்றது. கவனமாக இருக்க வேண்டும். வரும் வருமானங்கள் கணக்கில்லாத செலவுகளுக்கு செல்ல இருக்கின்றது என்பதை தெரியப்படுத்துகிறது. ஒவ்வொரு நாளும் நாம் சம்பாதிக்கும் பணத்தை வீட்டில் கணவன் அல்லது மனைவியிடம் கொடுத்து மறுநாள் வாங்கி வர வேண்டும். அப்படி செய்தால் நன்றாக இருக்கும். லாபம் என்பது பணம் மட்டும் கிடையாது. வீட்டின் சந்தோஷ சூழ்நிலையும் ஆகும்.ஆகவே சற்று விழிப்போடு இருந்து இந்த குரு பெயர்ச்சி காலத்தை கழித்தால் நல்லதே நடக்கும்.
உங்கள் அயன, சயன ஸ்தானத்தை பொருத்தவரை குரு, சனி, ராகு இவர்களின் சஞ்சாரம் சரியில்லை. கேது ஒருவரே உங்களுக்கு அனுகிரகமாக உள்ளார். கேது கிரகம் என்பது ஆன்மிக ஞானத்தை தரும் கிரகம் என்பதால் நீங்கள் அருகில் உள்ள ஜீவசமாதி மற்றும் மூதாதையர்கள் வழிபாடு செய்து வந்தால் லாபம் என்பது குடும்பத்திலும், பணவரவிலும் உண்டாகும்.
உங்கள் ராசி அதிபதி புதனின் அதி தேவதையான ஸ்ரீமன் நாராயணனை வழிபட்டு வந்தால் நல்லதே நடக்கும்! வாழ்க வளமுடன்!!
பரிகாரம் : திட்டை, ஆலங்குடி, பட்டமங்கலம் ஊர்களில் உள்ள குரு பகவானுக்கு வழிபாடு செய்வதும், குச்சனூர், திருநள்ளாறு, ஏரி குப்பம் ஊர்களில் உள்ள சனி பகவானுக்கு பிரீதி செய்வதும், திருப்பாம்புரம், திருநாகேஸ்வரம், காளகஸ்தி ஸ்தலங்களில் உள்ள ராகு பகவானுக்கு அர்ச்சனை செய்வதும், அனாதை குழந்தைகளுக்கு அன்னதானம் செய்வதும், கால்நடைகளுக்கு தீவன தானம் செய்வதும், நூல்களில் அனுமன் சலீசா நூலை பாராயணம் செய்வதும், நாங்கள் 18/5/2025 இல் ஏற்பாடு செய்துள்ள மகா நவகிரக பரிகார ஹோமத்தில் கலந்து கொள்வதும் மிகச் சிறந்த பரிகாரங்கள் ஆகும்.