Homeசெய்திகள்மலை ஆக்கிரமிப்பு -ஐகோர்ட்டு அமைத்த குழு முக்கிய ஆலோசனை

மலை ஆக்கிரமிப்பு -ஐகோர்ட்டு அமைத்த குழு முக்கிய ஆலோசனை

திருவண்ணாமலை மலை மீது உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து நில நிர்வாக ஆணையாளரிடம் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட குழு இன்று முக்கிய ஆலோசனையை நடத்தியது.

திருவண்ணாமலை மலை மீது உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் குளங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதன் பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜ் தலைமையில் ஒரு குழுவை ஐகோர்ட்டு அமைத்தது.

இந்த குழு இதுவரை திருவண்ணாமலையில் மூன்று முறை கூடி மலை மீது உள்ள ஆக்கிரம்புகளை எப்படி அகற்றலாம்? என ஆலோசனை நடத்தியது.

இந்நிலையில் மலை மீது அபாயகரமான பகுதியில் 1535 வீடுகள் இருப்பதாக அதிகாரிகளால் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஓட்டு கேட்க எங்களிடம் வரக் கூடாது எனவும் அவர்கள் கோபமாக தெரிவித்தனர்.

இதையடுத்து திமுக தரப்பில் மலை மீது இருக்கும் குடியிருப்பாளர்களை வழக்கில் சேர்த்து அவர்கள் தரப்பு நியாயங்களை கோர்ட்டில் தெரிவிக்க மூத்த வழக்கறிஞர் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

See also  எஸ்.டி சான்று கேட்டு 500 பேர் திரண்டனர்

குடியிருப்பாளர்களுக்கு ஆதரவாக திமுக தரப்பு இறங்கியதால் வேறு வழியின்றி அதிமுகவும் குடியிருப்பாளர்களை சந்தித்தது. அப்போது அதிமுக தரப்பில் வழக்கு தொடரப்படும் என உறுதிமொழி அளிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

மலை ஆக்கிரமிப்பு -ஐகோர்ட்டு அமைத்த குழு முக்கிய ஆலோசனை

இந்நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட குழு இன்று 4-வது முறையாக திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கூடி ஆலோசனை நடத்தியது.

அப்போது மலைமீது இருக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் கொடுப்பது சம்பந்தமாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து நில நிர்வாக ஆணையாளரிடம் ஓய்வு பெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜ் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கேட்டறிந்தார்.

இந்த கூட்டத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமபிரதீபன், மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ், வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் யானை ராஜேந்திரன் செய்தியாளரிடம் கூறியதாவது,

மலை ஆக்கிரமிப்பு -ஐகோர்ட்டு அமைத்த குழு முக்கிய ஆலோசனை

மலையில் அபாயகரமான நிலையில் இருக்கும் 1535 வீடுகளை முதலில் எடுக்க வேண்டும். இவர்கள் சிறிய சிறிய வீடுகளைத் தான் கட்டியிருக்கிறார்கள். அவர்களுக்கு கீழே பட்டாவுடன் கூடிய நல்ல வீடு கொடுத்து கால்வாய், குடிநீர் வசதிகளை செய்து தர வேண்டும்.

See also  கொள்ளையர்கள் கைது- 22 வாகனங்கள்¸ ஆயுதங்கள் பறிமுதல்

மாற்று இடத்துக்கு அவர்கள் போவதுதான் நல்லது. மலையிலிருந்து ஏன் கஷ்டப்பட வேண்டும்? மலையில் வீடு கட்டுவதே தவறு. 10 வருடம் இருந்தேன், 50 வருடம் இருந்தேன் என்பதெல்லாம் உரிமையை கொடுக்காது. சட்டப்படி அவர்களுக்கு உரிமை இல்லை. எனவே அரசு அவர்களுக்கு மாற்று இடம் தர வேண்டும். வாழ்வாதாரத்துக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும்.

நீதிமன்றத்தை அணுகுவது எல்லோருக்கும் உள்ள உரிமை. நீதிமன்றத்தை அணுகி கஷ்ட, நஷ்டத்தை சொல்லட்டும். நீதிமன்றம் என்ன உத்தரவு கொடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!