Homeசுகாதாரம்முககவசம் அணியாவிட்டால் இனி ஸ்பாட் பைன்

முககவசம் அணியாவிட்டால் இனி ஸ்பாட் பைன்

முககவசம் அணியாவிட்டால் இனி ஸ்பாட் பைன்

திருவண்ணாமலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்காதவர்களிடமிருந்து ஸ்பாட் பைனாக ரூ.27ஆயிரம் வசூலிக்கப்பட்டது.

தொற்று பரவாமல்

தமிழகத்தில் கடந்த ஆண்டு 24.03.2020 முதல் முழு ஊரடங்கு பிறக்கப்பட்டு¸ தற்போது தளர்வுகளுடன் 31.03.2021 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய¸ மாநில அரசுகளின் அறிவுறுத்திலின்படி கோவிட்-19 கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் சில மாவட்டங்களில் கோவிட்-19 கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் அதிகரித்து வருவதால்¸ திருவண்ணாமலை மாவட்டத்தில் கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

திடீர் சோதனை 

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி உத்தரவின் பேரில்,வேலூர் மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநர் விஜயகுமார் வழிகாட்டுதலின் படி திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர் ப. கிருஷ்ணமூர்த்தி தலைமையில்¸ நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் இரா¸ஆல்பர்ட்¸ எஸ் வினோத் கண்ணா மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் கொண்ட குழுவினர் திருவண்ணாமலை நகரின் முக்கிய இடங்களில் திடீர் சோதனை நடத்தினர். 

சமுதாய இடைவெளி

போளூர் ரோடு¸ எல்.ஜி.ஜி.எஸ். நகர்¸ மத்தளாங்குளத் தெரு¸ மார்க்கெட் பகுதி¸ திருவூடல் தெரு¸ தேரடி தெரு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பொது மக்களால் கடைப்பிடிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்தனர். அப்போது முககவசம் அணியாத நபர்கள்¸ சமூக இடைவெளி கடைபிடிக்காத நிறுவனங்கள்.¸ அரசு அறிவித்துள்ள கோவிட் 19 தடுப்பு நடவடிக்கைகள் கடைபிடிக்காத வர்த்தக நிறுவனங்கள்¸ முகவுரை அணியாமல் இருசக்கர வாகனங்களில் மற்றும் பொது இடங்களில் சுற்றி வந்த பொதுமக்கள் போன்றோர்களை குழு கண்டறிந்தது.

முககவசம் அணியாவிட்டால் இனி ஸ்பாட் பைன்

பயணிகளுக்கு எச்சரிக்கை

இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்காததால் அவர்களிடமிருந்து மொத்தம் ரூ. 27 ஆயிரத்தி 200 அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் அணியாமலும் சமூக இடைவெளிகளை பிடிக்காமலும் சென்ற பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்கி தொடர்ந்து இவ்வாறு கோவிட் தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டனர். 

தொற்று பரவாமல் 

அரசின் கோவிட்-19 வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கவில்லை என்றால் அபராதம் விதிப்பது உட்பட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும்¸ திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள்¸ வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்கள் தமிழக அரசின் கோவிட்-19 வழிகாட்டு நெறிமுறைகள் முழுமையாக கடைபிடித்து கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி கேட்டுக் கொண்டுள்ளார். 

தீவிர கண்காணிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் இனிவரும் காலங்களில் தீவிரமாக கண்காணிக்கப்படும்¸ விதிமுறைகளை மீறும் வர்த்தக நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதுடன் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். நல்லெண்ண அடிப்படையில் எடுக்கப்படும் இந்த நடவடிக்கைகளுக்கு வர்த்தக நிறுவனங்களும்¸ பொதுமக்களும் ஒத்துழைப்பு அளித்து கொரோனா காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை கடுமையாக பின்பற்றி நோய்த் தொற்றில் இருந்து தங்களையும்¸ தங்கள் குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்ளுமாறு நகராட்சி ஆணையாளர் ப. கிருஷ்ணமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார். 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!