Homeசெய்திகள்தகுதியுள்ள ஒப்பந்ததாரருக்கே வேலை- எ.வ.வேலு கண்டிப்பு

தகுதியுள்ள ஒப்பந்ததாரருக்கே வேலை- எ.வ.வேலு கண்டிப்பு

முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தில் தகுதியுள்ள ஒப்பந்ததாரர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு கூறினார். 

கடலூர் – சித்தூர் சாலையினை இருவழிப்பாதையில் இருந்து நான்கு வழிப்பாதையாக ரூ.209 கோடியில் அகலப்படுத்தி மேம்பாடு செய்தல் பணியினை துவக்கி வைக்கும் போது இவ்வாறு கூறிய அவர் திருவண்ணாமலை ஒப்பந்ததாரர்களுக்கு இன்னும் தகுதி வரவில்லை என்றார். 

திருவண்ணாமலை அடுத்த  தென்மாத்தூரில் இன்று நடைபெற்ற இவ்விழாவில் அவர் பேசியதாவது¸

தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன்¸ முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டம் என்ற புதிய திட்டத்தினை கொண்டு வந்தார். ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்தை இணைக்கும் 2 வழி சாலைகளை எல்லாம் 4 வழி சாலைகளை அகலப்படுத்திடவும்¸ ஒரு மாவட்ட தாலுக்காவிலிருந்து வட்ட தாலுகாவிற்கு செல்லும் சாலைகளை 4 வழி சாலைகளாக மாற்றி அமைப்பதுதான் இத்திட்டத்தின் நோக்கமாகும். 

தகுதியுள்ள ஒப்பந்ததாரருக்கே வேலை- எ.வ.வேலு கண்டிப்பு

இத்திட்டத்திற்கு சென்ற நிதியாண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 255 கி.மீ தொலைவில் ரூ.2123 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாட்டில் 32 இடங்களில் பணிகள் துவங்கப்பட்டு நடைபெற்று கொண்டிருக்கிறது. கடலூர்-சித்தூர் சாலை என்பது திருவண்ணாமலை–திருக்கோயில் வரையுள்ள சாலை ஆகும். 

எந்த துறையில் எந்த ஒப்பந்ததாரர்கள் வேலை செய்கிறார்கள் என்று எனக்கு தெரியாது. ஒப்பந்ததாரர்களின் பிரச்சனைகளை தீர்க்க ஒரு கூட்டம் போட்டோம். அப்போதுதான் ஒப்பந்தாரர்களை பார்த்தேன். தனிப்பட்ட முறையில் எந்த ஒப்பந்ததாரர்களையும் எனக்கு தெரியாது.

தகுதியுள்ள ஒப்பந்ததாரருக்கே வேலை- எ.வ.வேலு கண்டிப்பு

திருவண்ணாமலை நான் பிறந்த மண் என்பதால் அடிக்கடி என் கண்ணில் படும் இந்த ரோடு பணியினை செய்யும் ஒப்பந்ததாரர்களை அழைத்து பேசினேன். இந்த சாலை தமிழ்நாட்டிலேயே ஒரு முன்மாதிரியாக சாலையாக அமைத்திட வேண்டும் என்று ஒப்பந்ததாரர்களிடம் அன்பு கட்டளையிட்டேன். அனைவரும் பாராட்டும் அளவிற்கு¸ ஏன் முதலமைச்சரே பாராட்டும் அளவிற்கு சாலை பணிகளை சிறப்பாக அமைத்து தருவோம் என்று இரண்டு ஒப்பந்ததாரர்களும் உறுதிமொழி அளித்தார்கள். 

முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தில் தகுதி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்படும். கடலூர் – சித்தூர் சாலையை நான்கு வழிப்பாதையாக மாற்றும் பணி தகுதியுள்ளவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை ஒப்பந்ததாரர்களுக்கு இன்னும் அந்த தகுதி வரவில்லை. 

தகுதியுள்ள ஒப்பந்ததாரருக்கே வேலை- எ.வ.வேலு கண்டிப்பு

தகுதியுள்ள ஒப்பந்ததாரருக்கே வேலை- எ.வ.வேலு கண்டிப்பு

பொருளாதாரம் வளர வேண்டும் என்று சொன்னால்¸ சாலைகள் முக்கியம். பொருளாதாரத்தின் முதுகெலும்பு நெடுஞ்சாலை என்கிறார்கள். அதனால் தான்¸ முதலமைச்சர் நெடுஞ்சாலைக்கு முக்கியத்துவம் தருகிறார். அரசு அலுவலர்கள் சம்பளத்திற்காக வேலை செய்யாமல் சமூக பங்களிப்போடு வேலை செய்ய வேண்டும். சாலை பணிகள் சிறப்பாக செய்தால் தான் போக்குவரத்து சிறப்பாக அமையும். போக்குவரத்து சிறப்பாக அமைந்தால் தான் சாலைகளில் விபத்துகள் தவிர்க்கப்படும்.

இந்த சாலை பணியின் போது 21 சிறுபாலங்கள் கட்டப்பட உள்ளது. பக்கக் கால்வாய் 27 இடங்களில் சுமார் 4070 மீ நீளத்திற்கு கட்டப்பட உள்ளது. 6 சாலை சந்திப்புகள் அமைய உள்ளது. பேருந்து நிலையங்கள் 10 முன்மொழியப்பட்டுள்ளது.

தகுதியுள்ள ஒப்பந்ததாரருக்கே வேலை- எ.வ.வேலு கண்டிப்பு

கடலூர் – சித்தூர் சாலையானது திருவண்ணாமலை நகரை திருக்கோவிலூர்¸ வெறையூர்¸ மணலூர்பேட்டை கடலூர். நெய்வேலி¸ விழுப்புரம்¸ திருச்சி போன்ற நகரங்களுடன் இணைக்கும் ஒரு முக்கியமான மாநில நெடுஞ்சாலை ஆகும். இந்த சாலை விவசாயப் பொருட்களை அருகிலுள்ள கிராமங்களில் இருந்து திரட்டுவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மேலும் அரகண்டநல்லூர்¸ பவித்திரம்¸ அழகானந்தல்¸ திருவண்ணாமலை¸ மங்கலம் மற்றும் அவலூர்பேட்டையில் உள்ள சந்தைப்படுத்துதல் மையங்களுக்கு எடுத்து செல்வதற்கு ஏதுவாக உள்ளது. இந்த சாலை திருச்சி¸ மதுரை¸ திருநெல்வேலி போன்ற தென் மாவட்டங்களை திருவண்ணாமலை¸ வேலூர்¸ திருப்பதியுடன் இணைக்கிறது. 

இவ்வாறு அவர் பேசினார். 

இவ்விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தார். திருவண்ணாமலை நெடுஞ்சாலை துறை வட்ட கண்காணிப்பு பொறியாளர் எஸ்.பழனிவேல் அனைவரையும் வரவேற்றார். தலைமை பொறியாளர் ஆர்.சந்திரசேகரன் திட்ட விளக்கவுரையாற்றினார். 

விழாவில் சி.என்.அண்ணாதுரை எம்பி, சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தம் கார்த்திகேயன்,பெ.சு.தி.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மு.பிரியதர்ஷினி¸ எ.வ.வே.கம்பன்¸ நெடுஞ்சாலை துறை உதவிகோட்ட பொறியாளர் வே.ரகுராமன், உதவி பொறியாளர் ஆ.கலைமணி ¸ மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் பாரதி ராமஜெயம், ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி¸ துணைத் தலைவர் ரமணன்¸ நகரமன்ற தலைவர் நிர்மலாகார்த்திவேல்மாறன், நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் கோட்ட பொறியாளர் க.முரளி நன்றி கூறினார்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!