Homeஆன்மீகம்சித்ரா பவுர்ணமி ஏற்பாடுகள் குறித்து கோயில் அதிகாரி விளக்கம்

சித்ரா பவுர்ணமி ஏற்பாடுகள் குறித்து கோயில் அதிகாரி விளக்கம்

சித்ரா பவுர்ணமிக்கு வருகை தரும் பக்தர்களுக்கு லட்சக்கணக்கில் பிஸ்கட் பாக்கெட், குடிநீர் பாட்டில்கள் மற்றும் கடலை மிட்டாய் வழங்கப்படும் என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த வருடம் சித்ரா பவுர்ணமி 11.05.2025 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.53 மணிக்கு தொடங்கி, மறுநாள் 12.05.2025 திங்கட்கிழமை இரவு 10.48 நிறைவடைகிறது.

 

சித்ரா பவுர்ணமிக்கு கிரிவலம் வர பல்வேறு நாடுகளிருந்தும், மாநிலங்களிருந்தும், 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சித்ரா பவுர்ணமி ஏற்பாடுகள் குறித்து கோயில் அதிகாரி விளக்கம்
பரணிதரன்

இந்நிலையில் பக்தர்களுக்கு செய்யப்பட்டிருக்கும் வசதிகள் குறித்து அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் பரணிதரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

பக்தர்கள் தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்ய வசதியாக 12.05.2025 அன்று ரூ.50 சிறப்பு தரிசன கட்டணம் ரத்து செய்யப்பட்டு, கட்டணமில்லா தரிசன சேவை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணி பெண்கள், கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்கள் ஆகியோர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்ய சிறப்பு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் பேட்டரி கார் மூலம் மேற்கு பேகோபுரம் கட்டை கோபுரம் வரை அழைத்து வரப்பட்டு, வைகுந்த வாயில் வழியாக சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சித்ரா பவுர்ணமி ஏற்பாடுகள் குறித்து கோயில் அதிகாரி விளக்கம்

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருக்கோயிலுக்கு வருகைப் புரியும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் 2 லட்சத்து 25 லட்சம் குடிநீர் பாட்டில்கள், 1 லட்சத்து 25 ஆயிரம் பிஸ்கெட் பாக்கெட்கள், 1 லட்சத்து 25 ஆயிரம் கடலை உருண்டைகள் மற்றும் தர்பூசணி, மோர் ஆகியவை உபயதாரர்கள் மூலம் வழங்க கோயில் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பக்தர்கள், கோயில் பணியாளர்கள் என 80 பேர்களுக்கு விபத்து காப்பீடு செய்யப்பட்டுள்ளது. தரிசன வழித்தடங்களில் 114 குடிநீர் குழாய்கள் மூலம், மணிக்கு 14 ஆயிரத்து 50 லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது.

கோயில் மற்றும் கிரிவலப்பாதையில் பக்தர்கள் பாதுகாப்பிற்காக 831 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது. மாடவீதிகளில் 14 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படுகிறது. பக்தர்களின் நலன் கருதி 5-ஆம் பிரகாரத்தில் கூடுதலாக 20 கழிப்பறைகள் நிறுவப்பட்டுள்ளது.

வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக நிழற்பந்தல்கள் அமைக்கப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.


Link:-http://www.youtube.com/@AgniMurasu

Join us for more Update

YouTube

@agnimurasu

error: Content is protected !!