Homeஆன்மீகம்அண்ணாமலையார் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

அண்ணாமலையார் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

அண்ணாமலையார் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு
 

திருவண்ணாமலைஅருணாச்சலேஸ்வரர் கோவிலில் சொர்க்கவாசல்திறப்பு நிகழ்ச்சிஇன்று அதிகாலை நடைபெற்றது.கோவிந்தா¸கோவிந்தாஎன்ற முழுக்கத்துடன்  பக்தர்கள்தரிசனம் செய்தனர்.

பிறவிப் பலன் 

மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி அன்று திருமாலின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் கதவுகள் திறக்கப்படுவதாக பக்தர்களால் நம்பப்படுகிறது. அன்றைய தினம் கோவில்களில் திறக்கப்படும்  சொர்க்கவாசலை கடந்து சென்றால் பிறவி பலனை அதாவது மோட்சத்தை அடையலாம் என்பது ஐதீகம்

சிவத்தலங்களில் முக்கியத் தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சிவன் சன்னதிக்கு பின்புறம் வேணுகோபாலர் சன்னதி உள்ளது. இங்கு பாமா¸ ருக்மணியுடன் வேணுகோபாலர் காட்சியளிக்கிறார். இவருக்கு வைகுண்ட ஏகாதசியன்று சிறப்பு அபிஷேம் நடைபெறும்.

அண்ணாமலையார் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

ஜோதி ரூபத்தில் பெருமாள்

மேலும் வைணவ கோயில்களில் மட்டுமே நடைபெறும் சொர்க்க வாசல் திறப்பு ¸ திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலிலும் ஆண்டு தோறும்   நடைபெற்று வருகிறது. பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கும் போது சுவாமி அவ்வாசல் வழியாக வெளியே வருவது வழக்கம். ஆனால்¸ சிவத்தலமான இங்கு ஜோதி ரூபத்தில் பெருமாள் சொர்க்கவாசல் கடக்கிறார் என்பது ஐதீகமாகும்.

See also  பழங்கால கோயிலில் இவ்வளவு கருவிகளா?

வெள்ளி கவசம் 

வைகுண்ட ஏகாதசியான இன்று சாமி தரிசனம் செய்ய அதிகாலை 3 மணியிலிருந்து கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நீண்ட கியூவில் பக்தர்கள் காத்திருந்தனர். அதிகாலை 3-30மணிக்கு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் நடை திறக்கப்பட்டு  பாமா¸ ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமிக்கு அபிஷேகம்¸ ஆராதனை¸ அலங்காரம் செய்யப்பட்டு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது. வைகுண்ட வாசல் எனப்படும் சொர்க்க வாசலும் பூக்களால் அலங்கரிப்பட்டது.

அண்ணாமலையார் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

கோயில் சிவாச்சாரியார்கள் இளவரசு பட்டம் பி.டி.ஆர்.கோகுல் குருக்கள்¸ பி.டி.எஸ்.அசோக் குருக்கள் ஆகியோர் வேணுகோபாலர் சன்னதியில் ஏற்றிய தீபத்தை வைகுண்ட வாசலுக்கு காட்டி பூஜை செய்தனர். அதன்பிறகு 4-45  மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

மலைக்கு தீபம் 

சிவாச்சாரியார்கள் மலையை நோக்கியும் தீபத்தை காட்டியதும் அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்  ‘கோவிந்தா¸ கோவிந்தா” என¸ பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்பி வழிபட்டனர். பிறகு சொர்க்க வாசல் வழியே சென்று வேணுகோபாலை வணங்கினர்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!