Homeசெய்திகள்யானை தந்தத்தால் ஆன சிலை விற்பனை-2 பேர் சிக்கியது எப்படி?

யானை தந்தத்தால் ஆன சிலை விற்பனை-2 பேர் சிக்கியது எப்படி?

திருவண்ணாமலை அருகே யானை தந்தத்தால் ஆன சிலையை விற்பனை செய்ய முயன்ற 2 பேர் சிக்கினர்.

விலங்குகளில் மிக நீண்ட நாட்கள் அதாவது 70 ஆண்டுகள் வாழக்கூடிய வாழக்கூடியது யானையாகும். ஏறக்குறைய 40 ஆயிரம் தசைகளால் ஆன தும்பிக்கையை உடையது. ஆண் யானைக்கு மட்டுமே இருக்கும் தந்தம் அடர்த்தியான எலும்பு திசுக்களால் ஆனது ஆகும். இந்த தந்தங்கள் மூன்று மீட்டர் வரை வளரக்கூடியது.

யானை தந்த சிலை விற்பனை-2 பேர் சிக்கியது எப்படி?

வியாபார நோக்கத்திற்காக யானைகள் கொல்லப்பட்டு தந்தங்கள் திருடப்படுகின்றன. யானையின் தந்தங்களை அப்படியே விற்கும் போது போலீஸ் கையில் சிக்கிக் கொள்வதை தவிர்க்க சின்ன சின்ன துண்டுகளாக வெட்டியும், அலங்கார பொருட்கள், சிலை, பொம்மை என செய்து விடுவார்கள். இப்படி வியாபாரம் செய்பவர்கள் அதிகம்.

இந்தியாவில் தேசிய பாரம்பரிய விலங்கான யானை, இந்து பண்டிகைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. யானை தந்தத்தின் வர்த்தகம் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் தந்தத்தின் வர்த்தகம் பல மில்லியன் டாலர் மதிப்பு உடையதாக கணக்கிடப்பட்டுள்ளது.

See also  டோல்கேட்டில் கட்டணமின்றி சென்ற வாகனங்கள்

சமீபத்தில் விழுப்புரத்தில் யானை தந்தத்தால் செய்யப்பட்ட 4 பொம்மைகளை விற்க முயன்ற வழக்கில் திருச்சி போலீஸ் எஸ்.ஐ மணிவண்ணன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

யானை தந்த சிலை விற்பனை-2 பேர் சிக்கியது எப்படி?

தமிழ்நாட்டில் யானை தந்தங்கள் கடத்தப்படுவதை தடுத்திட மத்திய வனவிலங்கு குற்ற கட்டுப்பாட்டு போலீஸ் பிரிவு தீவிர கண்காணிப்பில் இறங்கியது. அப்போது ஊத்தங்கரையில் யானை தந்தம் வைத்திருந்தவர்கள் சிக்கினர். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் ஓசூர் மற்றும் திருவண்ணாமலை பகுதியில் யானை தந்தங்களால் ஆன சிலைகள் விற்பனைக்காக வைத்திருப்பது தெரியவந்தது.

யானை தந்த சிலை விற்பனை-2 பேர் சிக்கியது எப்படி?

இதை தொடர்ந்து ஓசூரில் யானை தந்தத்தால் ஆன விநாயகர் சிலை பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் கொடுத்த தகவலை அடுத்து திருவண்ணாமலை பகுதியில் யானை தந்தத்தால் ஆன சிலைகளை வைத்திருந்தவர்களை பிடிக்க வனவிலங்கு குற்ற கட்டுப்பாட்டு பிரிவு போலீசார் திட்டமிட்டனர்.

அதன்படி சிலை வாங்குவது போல் சாதாரண காரில் சென்ற போலீசார் திருவண்ணாமலை அடுத்த தச்சம்பட்டு கூட்ரோட்டில் சம்மந்தப்பட்ட 2 பேரை வரவழைத்து பேரம் பேசினர். பிடிகொடுக்காமல் பேசிய அவர்களிடம் போலீசார் தங்களிடமிருந்த பணக்கட்டுகளை காட்டிதும் சம்மதம் தெரிவித்தனர்.

See also  ஏன் தோத்தீங்க தெரியுமா? மாணவனுக்கு விளக்கினார் கலெக்டர்

இங்கேயே இருங்கள், சிலையை எடுத்து வருகிறோம் என சொல்லி விட்டு 2 பேரும் புறப்பட்டு சென்றனர். அவர்களை சற்று தள்ளி மறைந்திருந்த போலீசார் ஒருவர், பின் தொடர்ந்து சென்றார். 2 பேரும் கண்டியாங்குப்பம் கிராமத்தில் உள்ள மரப்பட்டறைக்குள் சென்றதும் பின் தொடர்ந்து சென்றவர், மற்றவர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

யானை தந்த சிலை விற்பனை-2 பேர் சிக்கியது எப்படி?

உடனே அந்த மரப்பட்டையை சுற்றி வளைத்த போலீசார் அங்கிருந்த யானை தந்தத்தால் செய்யப்பட்ட கிருஷ்ணர் சிலையை பறிமுதல் செய்தனர். மேலும் 2 அடி உயரம், 10 கிலோ எடை கொண்ட முருகர் சிலை ஒன்றும் அங்கு இருந்தது. அதையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சிலை நவபாஷாணத்தால் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. சோதித்து பார்த்த பிறகே நவபாஷாணமா என்பது தெரிய வரும் என்றும், நவபாஷாணம் என்றால் இதன் மதிப்பு ரூ.25 கோடி இருக்கும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

மத்திய வனவிலங்கு குற்ற கட்டுப்பாட்டு பிரிவு போலீசார், சிலைகளையும், அவற்றை விற்க முயன்ற கண்டியாங்குப்பத்தைச் சேர்ந்த கால்நடை செயற்கை முறை கருவூட்டல் பணியாளரான வெங்கடேசன், ராஜசேகர் ஆகியோரையும் திருவண்ணாமலை வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

See also  திருவண்ணாமலையில் தாய்-சேய் மரணம்-சாலை மறியல்

மிகப்பெரிய நெட்வொர்க் அமைத்து யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதும், இதன் முக்கிய புள்ளி பெங்களூரில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்த புள்ளியை பிடிக்க போலீசார் வலைவிரித்துள்ளனர்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!