மினரல் வாட்டர் கம்பெனியில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

Date:

மினரல் வாட்டர் கம்பெனியில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

திருவண்ணாமலையில் மினரல் வாட்டர் கம்பெனியில் நிலத்தடி நீர் எடுப்பதற்காக லஞ்சம் வாங்கிய நீர்வள அதிகாரி கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை செங்கம் ரோட்டில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நிலநீர் நிலவியல் பிரிவு(Ground Water Section) செயல்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்த இந்த துறை, தனியாக பிரிக்கப்பட்ட நீர்வளத்துறையின் கீழ் தற்போது இயங்கி வருகிறது.

நிலத்தடி நீரை பரிசோதிப்பது, பாசன கிணறுகளை கணக்கெடுப்பது, போர் போடுவதற்கு கடன் கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு தடையில்லா சான்று வழங்குவது, மினரல் கம்பெனிகளுக்கு நிலத்தடி நீர் எடுக்க அனுமதி வழங்குவது போன்ற பணிகளை இத்துறை மேற்கொண்டுள்ளது.

இங்கு திருச்சி பெரம்பலூரைச் சேர்ந்த சிந்தனைவளவன்(வயது 50) என்பவர் உதவி நிலவியலாளராக கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார். குடும்பம் பெரம்பலூரில் இருக்க இவர் மட்டும் திருவண்ணாமலை துர்க்கையம்மன் கோயில் தெருவில் ரூம் எடுத்து தங்கி உள்ளார்.

மினரல் வாட்டர் கம்பெனியில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

திருவண்ணாமலை புதுவாணியங்குளத் தெருவைச் சேர்ந்த பிரபல வாணக்கடை அதிபர் லாலின் மகன் லியாகத் அலி(வயது 46) என்பவர், திருவண்ணாமலை காஞ்சி ரோட்டில் சோலா என்ற பெயரில் மினரல் வாட்டர் கம்பெனியை நடத்தி வருகிறார். இதற்காக நிலத்தடி நீரை எடுக்க அனுமதி கேட்டு திருவண்ணாமலையில் உள்ள அலுவலகத்தில் மூன்று முறை விண்ணப்பித்திருந்தார். ஆனால் கையூட்டு கொடுக்காததால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து வியாகத் அலி சென்னையில் உள்ள நிலநீர் பிரிவு தலைமை அலுவலகத்திற்கு கடந்த 15ந் தேதி விண்ணப்பித்திருந்தார்.

See also  கோயிலுக்கு வரும் பக்தர்கள் உட்கார இருக்கை வசதி

இதன் பேரில் கடந்த 23ந் தேதி அந்த கம்பெனிக்கு சென்ற உதவி நிலவியலாளர் சிந்தனைவளவன், ஆய்வு நடத்தினார். பிறகு அனுமதி வழங்க ரூ.9லட்சம் கேட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கு லியாகத் அலி ஒத்துக் கொள்ளவில்லை. பைனலாக ரூ.3லட்சம் தர வேண்டும் என சொல்லி விட்டு சென்றாராம். அவரது பெயருக்கு ஏற்ப தொகையையும் வளமாக கேட்டதால் லியாகத் அலி அதிர்ச்சி அடைந்தார்.

மினரல் வாட்டர் கம்பெனியில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

லஞ்சம் தர விருப்பம் இல்லாததால் லியாகத் அலி இது சம்மந்தமாக திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்தார். போலீசாரின் ஏற்பாட்டின் படி ரூ.3லட்சத்தில் முன்பணமாக ரூ.50 ஆயிரம் தருவதாக சிந்தனைவளவனிடம், லியாகத் அலிகான் கூறி கம்பெனிக்கு வருமாறு அழைத்தார்.

பணம் கிடைக்க போகிற மகிழ்ச்சியில் சென்ற சிந்தனைவளவனுக்கு கடைசியாக காப்புதான் கிடைத்தது. சோலா கம்பெனிக்கு சென்று கைரேகை பதியக் கூடிய ரசாயனம் தடவிய பணத்தை பெற்ற போது சிந்தனைவளவனை மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. திருவேல்முருகன் தலைமையிலான போலீசார் கையுங்களவுமாக பிடித்து கைது செய்தனர்.

See also  காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகள்

அவரை போலீசார் லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் நிலத்தடி நீர் எடுக்க விண்ணப்பித்திருந்த 74 மின்னல் வாட்டர் கம்பெனிகளில் “தன்னை கவனித்த” 4 கம்பெனிகளுக்கு மட்டுமே அவர் அனுமதி வழங்கி இருப்பது தெரிய வந்தது. அவரிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Share post:

Subscribe

Popular

More like this
Related

பதவியேற்ற 6 மாதத்தில் திருவண்ணாமலை தாசில்தார் மாற்றம்

பதவியேற்ற 6 மாதத்தில் திருவண்ணாமலை தாசில்தார் அதிரடியாக மாற்றப்பட்டிருக்கிறார். ஒவ்வொரு தாலுக்காக்களிலும் பணிபுரியும்...

ரூ.3½ கோடியில் அண்ணாமலையார் கோயிலில் தற்காலிக ஷெட்

அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் ஓய்வு எடுத்துச் செல்லும் வகையில் கியூ வரிசை...

க்யூ ஆர் கோடு ஆட்டோக்களுக்கு மட்டுமே அனுமதி

திருவண்ணாமலையில் க்யூ ஆர் கோடு இல்லாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை என...

பழங்கால கோயிலில் இவ்வளவு கருவிகளா?

பழங்கால கோயிலில் இவ்வளவு கருவிகளா? என அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் சிவனடியார்கள்...

அமித்ஷா வந்தாலே ஆட்சி மாற்றம்தான்-நயினார் நாகேந்திரன்

அரியானா, மகாராஷ்ரா, டெல்லிக்கு அமித்ஷா சென்றார், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதே...

திருவண்ணாமலை:-427 சமையல் உதவியாளர் நியமனத்திற்கான அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாகவுள்ள சமையல் உதவியாளர்...
error: Content is protected !!