ஸ்டேடியத்தில் ரூ.50 லட்சத்தில் டர்ப் கிரிக்கெட் மைதானம்

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்ட செயற்கை புல் தரை கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தை கலெக்டர் வந்தனா கார்க் திறந்து வைத்தார். 

ஸ்டேடியத்தில் ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்ட டர்ப் கிரிக்கெட் மைதானம்

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பாக்ஸ் கிரிக்கெட் டர்ஃப் கிரிக்கெட் விளையாட்டு மைதானம் ((Box Cricket Turf) அமைக்கப்பட்டுள்ளது. 

இதை கலெக்டர் வந்தனா கார்க் திறந்து வைத்து கிரிக்கெட் விளையாடினார். இதில் போளூர் எம்.எல்.ஏ ஆர்.அபிஷேக் மாவட்ட விளையாட்டு அலுலவர் சண்முகப்பிரியா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் ரூ, 49 லட்சத்து 79 ஆயிரத்து 179 மதிப்பீட்டில் 32 மீட்டர் நீளமும், 16 மீட்டர் அகலமும் கொண்ட பாக்ஸ் கிரிக்கெட் டர்ஃப் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. 

ஸ்டேடியத்தில் ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்ட டர்ப் கிரிக்கெட் மைதானம்

பாக்ஸ் கிரிக்கெட் மைதானத்தினை பயன்படுத்திட TURF TOWN செயலியின் மூலம் ரூ.826/-((ரூ.700+18%GST) ஒரு மணி நேரத்திற்கான கட்டணத்தினை online பணபரிவர்த்தனை மூலம் செலுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Previous Post

No comments