வாலிபர் படுகொலை-2 பெண்களுக்கு கத்தி குத்து

திருவண்ணாமலையில் குடும்பத் தகராறு காரணமாக வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். தடுக்க வந்த 2 பெண்களுக்கு கத்தி குத்து விழுந்தது.

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலையில் உள்ள நகராட்சி பணியாளர்கள் குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் பாண்டியன். இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு மூன்று மகள்கள் ஒரு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் ஒரு மகன் பரணிதரன்(22) தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார்.

பரணிதரன்

பாண்டியனின் மூத்த மகள் சுகுணாவிற்கு திருமணம் ஆகிவிட்டது. கணவர் பெயர் ராம்ஜி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் பாண்டியனின் வீட்டிலேயே தங்கி வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று சுகுணாவிற்கும் ராம்ஜிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க சென்ற விஜயாவை ராம்ஜி தாக்கியதாக கூறப்படுகிறது.

பணி முடிந்து வீட்டிற்கு வந்த பரணிதரன் ராமஜியிடம் இது பற்றி கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் ராம்ஜி கத்தியால் பரணிதரனை குத்தியதாக சொல்லப்படுகிறது. தடுக்க வந்த பரணிதரனின் தாய் விஜயாவுக்கும், சகோதரி கல்கிக்கும் கத்தி குத்து விழுந்தது.

விஜயா

இதில் விஜயா குடல் சரிந்த நிலையிலும், கல்கி காயங்களுடனும் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ராம்ஜியை தேடி வருகின்றனர். இச்சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 Tiruvannamalai Agnimurasu     contact@agnimurasu.com 

Next Post Previous Post

No comments