திருவண்ணாமலையில் வேலை வாய்ப்பு முகாம்

திருவண்ணாமலையில் வருகிற 21ந் தேதி நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமில் 250 காலியிடங்களை நிரப்ப 15க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் இந்த தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் குறித்து கலெக்டர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது,தனியார் துறை நிறுவனங்களும் - தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள அனைத்து வகை பதிவுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் 'வேலை வாய்ப்பு முகாம்' இம்மாதம் எதிர்வரும் 21.07.2023 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளது.திருவண்ணாமலை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி. வழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெற உள்ள இம்முகாமில் 15-க்கும் மேற்பட்ட முன்னனி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 250-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.எட்டாம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு பட்டப்படிப்பு. முதுநிலைப் பட்டப்படிப்பு பொறியியல், ஐ.டி.ஐ. பாலிடெக்னிக் தேர்ச்சி பெற்ற வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். முகாம் அன்று தங்களுடைய 4 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம். ரேஷன் அட்டை சாதிச்சான்று, கல்வி தகுதி சான்றிதழ்களின் நகலுடன் முகாமில் கலந்துகொள்ள வேண்டும்.முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு 04175-233381 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.எனவே திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் இம் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
      Tiruvannamalai Agnimurasu contact@agnimurasu.com 
Next Post Previous Post

No comments