ஏடிஎம் கொள்ளையன் கைது- கண்டெய்னர் லாரி பறிமுதல்

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் 6 வது குற்றவாளியை போலீசார் கைது செய்து கண்டெய்னர் லாரியை பறிமுதல் செய்தனர்.

கடந்த மாதம் 12-ந் தேதி அதிகாலை திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூர் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏடிஎம் மையங்களில் கேஸ் கட்டிங் இயந்திரத்தை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து ரூ..72 லட்சத்து 79 ஆயிரத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர்.கொள்ளையர்களை பிடிக்க வடக்கு மண்டல ஐஜி கண்ணன் உத்தரவின்படி வேலூர் டிஐஜி முத்துசாமி மேற்பார்வையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் கார்த்திகேயன் (திருவண்ணாமலை), ராஜேஷ் கண்ணன் (வேலூர் மாவட்டம்) பாலகிருஷ்ணன் (திருப்பத்தூர்), கிரண் ஸ்ருதி (ராணிப்பேட்டை) ஆகியோர் தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.இச்சம்பவத்தில், வெளிமாநிலத்தை சேர்ந்த 6 பேர்களுக்கு மேற்பட்டவர்கள் ஈடுபட்டதும், இவர்கள் கர்நாடகா மாநிலம் கோலார் பகுதியில் தங்கியிருந்து குற்றம் நடந்த பகுதிகளை ஏற்கனவே நோட்டமிட்டு அதன் பின்பு கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.இவ்வழக்கில் ஏற்கனவே ஆரிப், ஆசாத் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். கோலார் பகுதியில் கொள்ளையர்களுக்கு உதவியதாக குதரத் பாஷா, அப்சர் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். பிறகு நிஜாமுதீன் என்பவனை சென்னையில் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களிடமிருந்து ரூ. 5 லட்சத்தையும், 2 கார்களையும் போலீசார் கைப்பற்றினர்.ஏடிஎம் கொள்ளையன் கைது- கண்டெய்னர் லாரி பறிமுதல்இந்நிலையில் இன்று 6வது குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். அவனது பெயர் சிராஜுதின் (வயது 50). இருப்பிடம்- ஜவாந்தி குர்த் கிராமம், திஜாரா வட்டம், ஆல்வார் மாவட்டம், ராஜஸ்தான் மாநிலம்.சிராஜுதினை கர்நாடகா மாநில எல்லையருகே தனிப்படையினர் கைது செய்து கொள்ளைக்கு பயன்படுத்திய கண்டெய்னர் லாரியையும் பறிமுதல் செய்தனர்.
Next Post Previous Post

No comments