Homeஅரசியல்யார் இந்த பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன்?

யார் இந்த பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன்?

யார் இந்த பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன்?
தொகுதி மாறி போட்டியிடுவது ஏன்?

திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் தொகுதி மாறி போட்டியிடுவது ஏன்? என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக யாரும் எதிர்பாராதவிதமாக கட்சியின் மாநில செயலாளர் அஸ்வத்தாமன் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

38 வயதாகும் அஸ்வத்தாமன், பி.ஏ.,பி.எல் படித்து முடித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகா புகைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். தந்தை பெயர் அல்லிமுத்து, தாத்தா பெயர் பரசுராம கவுண்டர்.

2004 முதல் 2009 வரை பாட்டாளி மக்கள் கட்சியில் தென்சென்னை மாவட்ட இளைஞரணி தலைவராக பொறுப்பு வகித்த அஸ்வத்தாமன், 2012ல் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

யார் இந்த பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன்?யார் இந்த பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன்?

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர், திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடுவது குறித்து சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. விநாயக கவுண்டர் என்பவரது பதிவிலிருந்து…

கூட்டணி கட்சிகளின் தர்மத்திற்காகத் தான் விரும்பிய பாராளுமன்ற தொகுதிகளை விட்டுக் கொடுத்து இறுதியாக திருவண்ணாமலையில் பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் போட்டியிடுகிறார். தான் விரும்பிய கடலூர் பாராளுமன்ற தொகுதியை கூட்டணி கட்சியான பாமகவிற்கு விட்டுக்கொடுத்ததால் தான் பாமக- என்டிஏ கூட்டணியில் அங்கம் வகிக்க முடிவு செய்தது.

பாமக, என்டிஏ கூட்டணியில் அங்கம் வகிக்க முக்கிய காரணம் பாஜகவின் மாநில செயலாளர் அஷ்வத்தாமன் அவர்கள் தான்.

இவ்வாறு அவர் பதிவிட்டிருக்கிறார்.

பொதுவாக திருவண்ணாமலையை பொறுத்த வரை பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் வெளியூரிலிருந்து வரும் வேட்பாளர்கள் வெற்றி பெற்றது இல்லை. குறிப்பாக திமுக வேணுகோபாலை எதிர்த்து போட்டியிட்ட பாமக காடுவெட்டி குரு, திமுக பிச்சாண்டியை எதிர்த்து போட்டியிட்ட பாமக செல்வக்குமார் ஆகியோரை சொல்லலாம்.

இந்நிலையில் அஸ்வத்தாமன், வெற்றி பெறுவாரா? யாருடைய வாக்குகளை கணிசமாக பிரிப்பார் என்பதுதான் தற்போதைய பேச்சாக உள்ளது.

யார் இந்த பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன்?

பாஜகவின் ஒவ்வொரு அடியும் மக்களிடம் மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. பிரதமர் மோடியின் வருகை மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வேட்பாளர் பட்டியல் என்பதும் மிகப் பெரிய நம்பிக்கை ஏற்படுத்துவதாக மக்கள் உணர்வதாக எங்களுக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

ஆர்.கே நகர் தேர்தலில் பாஜக நோட்டாவுக்கு கீழே வந்தது. அந்த தேர்தலில் திமுக டெபாசிட் இழந்தது. ஆனால் அந்த கட்சிதான் இப்போது ஆட்சியில் இருக்கிறது. ஆயிரம் விமர்சனங்களை செய்யலாம். இன்றைக்கு தமிழகமே பாஜகவின் கோட்டையாக மாறி இருக்கிறது. இதுதான் களத்தில் உள்ள நிலவரம்.

பிரதமர் நரேந்திர மோடியின் திட்டத்தில் தமிழகத்தில் உள்ள எட்டு கோடி பேரும் ஏதாவது ஒரு வகையில் பயனாளிகள். கருவில் உள்ள குழந்தை கூட நரேந்திர மோடி திட்டத்தினுடைய பயனாளி. கருவில் உள்ள குழந்தைக்கு ஊட்டச்சத்து கிடைக்க வேண்டும் என்பதற்காக மாதம் 6 ஆயிரம் ரூபாய் மோடி தருகிறார்.

விவசாயிகளுக்கு கொடுக்குற 6 ஆயிரம் ஆகட்டும், வீட்டுக்கு குடிநீர் தரும் திட்டம், வங்கி கணக்கு ஆரம்பித்தல் என எல்லோரும் பயனாளிகளாக இருக்கின்றனர். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் ஒரு எழுச்சி இருக்கிறது என மற்ற பாஜக வேட்பாளர்களுக்கு மட்டுமன்றி தனது வெற்றிக்கும் இன்று அளித்துள்ள பேட்டி ஒன்றில் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் அஸ்வத்தாமன்.


Link:-http://www.youtube.com/@AgniMurasu

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!