மகளை சீரழித்தவரை வெட்டி சாய்த்த தந்தை

மகளை சீரழித்தவனை வெட்டி சாய்த்த தந்தை

17 வயது மகளை சீரழித்த வழக்கில் போக்சோவில் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தவரை அண்ணன்களுடன் சேர்ந்து தந்தை வெட்டிக் கொன்றார். 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த பாண்டியம்பாக்கம் கிராமத்தில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்தகாரம் செய்த வழக்கில் போக்சோ சட்டத்தில் கைதாகி சிறைக்கு சென்று ஜாமினில் வெளிய வந்த 3 குழந்தைகளின் தந்தை வெட்டி கொலை செய்யப்பட்டார்.

செய்யாறு அடுத்த பாண்டியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 30). லாரி டிரைவர். இவருக்கு திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளனர். அதே கிராமத்தைச் சேர்ந்தவர் தணிகைமலை. இவரது 17வயதுடைய மகள் பள்ளியில் படித்து வந்தார். கடந்த வருடம் முருகன்¸ அந்த மாணவியை ஆசை வார்த்தைகளை கூறி வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்தகாரம் செய்ததாக சொல்லப்படுகிறது. 

மகளை சீரழித்தவனை வெட்டி சாய்த்த தந்தை

இதில் மாணவி கர்ப்பம் அடைந்தார். இது அவரது பெற்றோர்களுக்கு தெரிய வந்தது. இதையடுத்து அந்த பள்ளி மாணவி¸ தன்னை ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றிய முருகன் மீது செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் முருகனை கைது செய்து 17.3.2022 அன்று சிறையில் அடைத்தனர். 

இந்நிலையில் கடந்த 22.6.2022-ம் தேதி முருகன்¸ ஜாமீனில் சிறையிலிருந்து வெளியே வந்தார். ஊரில் சர்வ சாதாரணமாக நடமாடிக் கொண்டிருந்த முருகனை பார்த்து மாணவியின் குடும்பத்தினா ஆத்திரம் அடைந்தனர். மகளை கர்ப்பமாக்கிய முருகனை தீர்த்து கட்ட தணிகைமலை முடிவு செய்தார்.  

சம்பவத்தன்று வீட்டின் பின்புறம் உள்ள தைல தோப்புக்கு இயற்கை உபாதையை கழிக்க முருகன் சென்றார். அவரை பின் தொடர்ந்து சென்ற மாணவியின் தந்தை தணிகைமலையும்¸ அண்ணன்களான சுரேஷ்¸ விக்னேஷ் ஆகிய மூன்று பேர்¸ கத்தியால் முருகனை சரமாறியாக வெட்டி விட்டு தப்பித்து சென்று விட்டனர். 

உடல் முழுவதும் வெட்டுக் காயங்களுடன்¸ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த முருகனை¸ அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக செய்யாறு அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து தூசி போலீசார் வழக்கு பதிவு செய்து தணிகைமலை¸ அவரது மகன்கள் சுரேஷ்¸ விக்னேஷ் ஆகிய 3 பேரை வலை வீசி தேடி வருகின்றனர். 

மகளை பலாத்காரம் செய்தவரை¸ அண்ணன்களுடன் சேர்ந்து தந்தை தீர்த்து கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Post Previous Post

No comments