தண்டபாணி ஆசிரமத்தின் 2021 குரு பெயர்ச்சி பலன்கள்

தண்டபாணி ஆசிரமத்தின் 2021 குரு பெயர்ச்சி பலன்கள்

நவகிரகங்களில் சுபகிரகமான குருபகவான் பணம் என்னும் செல்வத்தை தருபவர். குரு பகவானின் யோகம் கிடைப்பது என்பது மிக மிக விசேஷமானதாகும். குரு பகவான் அருள் இருந்தால் எப்படி பணம் வரும்¸ எப்படி புகழ் வரும் என்பது தெரியவே தெரியாது. அப்படிப்பட்ட குரு பகவான் 13-11-2021 சனிக்கிழமை¸ ஐப்பசி-27 ஆம் நாள் மாலை 6-21 மணி அளவில் கும்ப ராசிக்கு செல்கிறார். 12-ஆண்டுகளுக்கு ஒருமுறை தேவகுரு பிரகஸ்பதி கும்ப ராசியில் சஞ்சாரம் செய்து பலன்களை தருவார். ஒவ்வொருவரின் ராசிப்படி என்னென்ன பலன்கள் தருவார் என்பதை காண்போம்!


மேஷம்
: (லாப குரு)

11-ஆம் இடமான லாப ஸ்தானத்தில் தேவகுரு சஞ்சரிக்கிறார்... தனக்காரனான குருபகவான் லாபம் தரும் இடத்தில் சஞ்சரிப்பதால் தனலாபம்¸ பொன் பொருள் சேர்க்கைஏற்படும்... தொழிலில் வெற்றி¸ நல்ல லாபம் கிடைக்கும். புதியதாக தொழில் தொடங்குவீர்கள்... பதவி உயர்வு¸ சம்பள உயர்வு ஏற்படும்... வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்... காதலில் வெற்றியும்¸ திருமண யோகமும் அமையும்... புத்திர சம்பத்து¸ வீடு மனை வாகன யோகம் அமையும்... புகழ் செல்வாக்கு உயரும்... குடும்பத்தில் மகிழ்ச்சியும்¸ உற்சாகமும் ஏற்படும்... கடன் அடைபடும்... மொத்தத்தில் இந்த குருபெயர்ச்சியில் பலவித லாபங்களுடன் நன்மைகளும் பொருளாதார முன்னேற்றமும் ஏற்படும்.

ரிஷபம் : (பதவியை பறிக்கும் குரு)

10-ஆம் இடமான தொழில்¸ ஜீவன ஸ்தானத்திற்கு குருபகவான் வருகிறார்...  கோட்சார ரீதியாக குருபகவானுக்கு உகந்த இடம் பத்து அல்ல... பத்திலே குரு பதவியை பறிக்கும் என்ற ஜோதிட சொல்லுக்கு ஏற்ப தொழிலில் பல பிரச்சனைகள் ஏற்படும்... தொழிலில் நஷ்டம்¸ பின்னடைவு ஏற்படும்... கூட்டுத் தொழிலில் பிரச்சனைகள்¸ கடன் தொல்லை¸ அவமானம்¸ அவப்பெயர் ஏற்படும்... உத்தியோகத்தில் செய்யாத குற்றத்திற்காக சஸ்பெண்ட் டிஸ்மிஸ் கூட நடைபெறும்... மொத்தத்தில் யார் எந்த தொழிலில் ஈடுபட்டிருந்தாலும் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்... பணமுடக்கம்¸ வீண் விரையம்¸ வீடு¸ வாகனத்தால் செலவு¸ மருத்துவச் செலவு ஏற்படும்... காதலில் தோல்வி¸ திருமணம் தள்ளி போகுதல் நடைபெறும். யாரையும் நம்பி ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். கோர்ட் கேஸ் என்று அலைய வேண்டி இருக்கும்... பெண்களுக்கு அவப்பெயர் ஏற்படும். கணவன்-மனைவிக்குள் சண்டை சச்சரவு வரும்... உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும்.

மிதுனம் : (பாக்கியம் தரும் குரு)

9-ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து உங்கள் ராசிநாதனான தேவகுரு பிரகஸ்பதி உங்களை பார்வையிடப் போகிறார்.. குருபகவானின் பார்வையால் எல்லாவித நன்மைகளும் வரப்போகிறது... ஓடிப்போனவனுக்கு ஒன்பதாமிடத்து குரு என்பார்கள்... இந்த ஒன்பதாமிடத்தில் குருபகவான் நீங்கள் நினைத்ததை எல்லாம் நடத்தி வைக்கப் போகிறார். இந்த ஒரு வருடம் தங்களுக்கு பொற்காலமாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம்¸ லாபம் ஏற்படும். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள்... பொன்¸ பொருள்¸ வாகனம் சேரும்... சிலர் வீடு மனை வாங்குவீர்கள்... தள்ளிப்போன திருமணம் கைகூடும்... காதலில் வெற்றி¸ புத்திர சம்பத்து ஏற்படும்... குடும்பத்தில் மகிழ்ச்சியும்¸ ஒற்றுமையும் ஏற்படும்... வேலையில்லாவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும்... பெரிய மனிதர்களின் ஆதரவு¸ தெய்வ தரிசனம் கிடைக்கும்... நோய் கட்டுக்குள் அடங்கி இருக்கும்... இருப்பினும் தங்களுக்கு அஷ்டமத்தில் சனி பகவான் இருப்பதால் மன உலைச்சலும் அவ்வப்போது வரும். எதிலும் கவனம் தேவை.

கடகம் : (தோல்வி¸ கஷ்டம் தரும் அஷ்டம குரு)

8-ஆம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் குருபகவான் அமர்வது நல்லதல்ல. எதிலும் கவனம் தேவை... எடுத்த செயல் எல்லாம் தோல்வியில் முடியும்... எப்போதும் டென்ஷனாகவே இருப்பீர்கள்... சோம்பல்¸ தூக்கம்¸ நோய் நொடி உங்களை ஆட்கொள்ளும்... ஒரு சிலருக்கு பைத்தியம் பிடிக்காத குறைதான்! மனதை தளரவிடாதீர்... உண்மையான பக்தியின் மூலம் இந்த சோதனைகளை நீங்கள் வெல்லமுடியும்.

தொழிலில் மட்டுமல்ல¸ திருமணம்¸ வேலைவாய்ப்பு என அனைத்திலும் இழுபறிதான்... இந்த ஒரு வருடம் தங்களுக்கு மிகவும் சோதனைகாலமாகும். நகைகள் அடகு கடைக்கு போகும்.. வீடு¸ வாகனம் என அனைத்திலும் வீண் செலவு ஏற்படும்... உடல் நிலை கோளாறால் மருத்துவ செலவு ஏற்படும்... கடன் தொல்லை¸ எதிரிகளின் தொல்லை அதிகரிக்கும்... புதிய தொழிலுக்கு இப்போது ஏதும் முயற்சிக்க வேண்டாம்... உத்தியோகஸ்தர்களுக்கு அவப் பெயர்¸ விரும்பாத இடமாற்றம் ஏற்படும்... 

சிம்மம் : (வெற்றி மேல் வெற்றி தரும் குரு)

7-ஆம் இடமான களத்திரம்¸ கூட்டுத்தொழில்¸ மக்கள் சக்தி¸ திருமணம்¸ காமம் ஆகிய ஸ்தானத்தில் குருபகவான் சஞ்சரிக்கிறார்... குருபகவானின் பார்வை உங்களுக்கு கிடைத்திருக்கிறது... இது மிகவும் விசேஷமாகும்... குருபகவானின் பார்வையில் அனைத்திலும் முன்னேற்றமும்¸ வெற்றியும் உண்டாகும்... குரு பார்க்க கோடி பாவம் நிவர்த்தி என்று சொல்லுவார்கள்... எனவே¸ குருபகவானின் பார்வையால்  தொழிலில் நல்ல முன்னேற்றமும் லாபமும் ஏற்படும்...  கூட்டுத்தொழிலில் சிறக்கும்... பதவி உயர்வு¸ சம்பள உயர்வு¸ ஏற்படும்... விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் கிட்டும்... கணவன்¸ மனைவி உறவு சிறக்கும்... காதலில் வெற்றி உண்டாகும்... திருமணம் கை கூடும்... வீடு¸ வாகனம்¸ பொன்¸ பொருள்¸ பணம் சேரும்... சிலர் வெளிநாடு செல்வீர்கள்... கோர்டு கேஸ் உங்களுக்கு சாதகமாக முடியும்... எல்லா முயற்சிகளும் வெற்றியை தரும்...

கன்னி : (கடன்¸ எதிர்ப்பு¸ நோய் மற்றும் தோல்விகளை தரும் குரு)

6-ஆம் இடமான கடன்¸ எதிர்ப்பு¸ நோய் ஆகிய ஸ்தானத்தில்  குருபகவான் அமர்வது அவயோகத்தை தரும்... எதிலும் தோல்வி¸ பயம்¸ எதிர்ப்பு ஏற்படும்... கடன் தொல்லை நோயின் தொல்லை அதிகரிக்கும்... தேவையில்லாத வீண் பிரச்சனைகள் வரும்... பணம்¸ பொருள் இழப்பு ஏற்படும்... தொழிலில் பின்னடைவு¸ நஷ்டம் ஏற்படும்... வீடு வாகனத்தால் செலவு¸ மருத்துவ செலவு¸ பிள்ளைகள் வகையில் செலவு என கையில் வைத்திருக்கும் காசை கரைத்துவிடும்... புதிதாக கடன் வாங்க வேண்டி வரும்... நகைகள் அடகு வைக்க நேரிடும்... வேலை செய்யுமிடத்தில் பகை¸ எதிர்ப்பு உண்டாகும்... மேலதிகாரிகளின் பகை உண்டாகும்... சிலருக்கு சஸ்பெண்ட்¸ மெமோ போன்றவை கிடைக்கும்... செய்யாத குற்றத்திற்காக அவப்பெயர் ஏற்படும்... உண்மையான பக்தியின் மூலம் இந்த சோதனைகளை நீங்கள் வெல்லமுடியும்.

துலாம் : (அதிர்ஷ்டம் தரும் குரு)

ஸ்ரீகுருபகவான் அதிர்ஷ்டம் தரும் 5-ஆம் இடத்திலிருந்து உங்களை பார்வையிடுகிறார்... குருபகவானின் பார்வையாலும்¸ பலத்தாலும் பல அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களை தேடி வரப்போகின்றன. எடுத்த முயற்சிகளில் எல்லாம் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்டலட்சுமி உங்களிடம் குடிக்கொள்வாள்... பொன்¸ பொருள்¸ பணம்¸ வீடு¸ வாகனம்¸ மனை என சேரும். தொழிலில் நல்ல இலாபமும்¸ வெற்றியும் கிடைக்கும்... சிலர் புதிதாக தொழில் துவங்க நேரிடும். கடன் அடைப்படும்... கோர்டு கேஸ் வழக்குகளில் வெற்றி உண்டாகும்... புகழ் செல்வாக்கு உயரும். எதிர்பாராத விதமாக பெருமளவு பணம் கிடைக்கும். கடன் அடைபடும். பதவி உயர்வால்¸ சம்பள உயர்வு ஏற்படும். விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும்... மேலதிகாரிகளின் ஆதரவு¸ அரசு ஆதரவு கிடைக்கும். திருமணம் கைகூடும்... காதலில் வெற்றி¸ குழந்தை பாக்கியம் ஏற்படும்... வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். சிலர் வெளிநாடு செல்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும்¸ ஒற்றுமையும் அதிகரிக்கும்.

விருட்சிகம் : (நடு நிலை தரும் குரு)

4-ஆம் இடமான வீடு¸ நிலம்¸ மனை¸ வாகனம் ஆகிய சுகஸ்தானத்தில் குருபகவான் சஞ்சரிக்கிறார்... 4-ஆம் இடம் குருபகவானுக்கு கோட்ச்சாரப்படி ஏற்ற இடம் இல்லை என்றாலும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்த மாட்டார்... அதே சமயம் நல்லதையும் செய்யமாட்டார்... ஆனால்¸ எதிலும் மந்த நிலை இருக்கும்... பண வரவில் மந்த நிலை¸ தொழிலில் மந்த நிலை என அனைத்து முயற்சிகளிலும்  மந்தநிலை இருக்கும்... வீடு¸ வாகனம்¸ நிலம்¸ மனை போன்றவற்றில் செலவுகள் ஏற்படும்... ஒரு சிலர் இவற்றை விற்கவும் செய்வீர்கள்... புதிய பொன் ஆபரணங்கள் வாங்குவது கடினம். திருமணம் தள்ளிப் போகும். தாயிடம் மனவேற்றுமை ஏற்படும்... உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பகை ஏற்படும்... தேவையற்ற விரும்பாத இடமாற்றம் ஏற்படும்... பதவி உயர்வு¸ சம்பள உயர்வு இழுபறியில் இருக்கும்... தொலைதூர பயணம் ஏற்படும்...

தனுசு : (போராட்டம் தரும் குரு)

3-ஆம் இடமான தைரியம்¸ சகோதரம்¸ வீரியம் ஆகிய ஸ்தானத்திற்கு குருபகவான் வருகிறார். 3-ஆமிடம் என்பது குருபகவானுக்கு ஏற்ற இடம் இல்லை. எதிலும் கவனம் தேவை... எதையும் நிறுத்தி நிதானமாக யோசித்து முடிவு எடுங்கள். தொழிலில் மந்த நிலை இருக்கும். பண வரவு தடைபடும்... புதிதாக பொன் பொருள் சேருவது கடினம்... நோயின் தொல்லை¸ கடன் தொல்லை இருக்கும்... செலவுகள் அதிகரிக்கும்... எதிலும் டென்ஷன் இருக்கும்... திருமணம் தள்ளி போகும்... கணவன்-மனைவிக்குள் பிரச்சனை ஏற்படும்... உடலில்¸ மனதில் சோர்வு ஏற்படும். வேலை செய்யுமிடத்தில் பிரச்சனைகள் ஏற்படும். அலைச்சல் ஏற்படும்... பதவி உயர்வு¸ சம்பள உயர்வு தடைப்படும்... தேவையற்ற விரும்பாத இடமாற்றம் இருக்கும்... ஏழரை ஆண்டு பாத சனிபகவானின் தொல்லையும் இருக்கும்.

மகரம் : (பொற்காலம் தரும் குரு)

2-ஆம் இடமான தனம்¸ கும்பம்¸ வாக்கு¸ லட்சியம் ஆகிய ஸ்தானத்தில் பொன்னவன் குருபகவான் சஞ்சரிக்கிறார்... மகர ராசி அன்பர்களே உங்களுக்கு பொற்காலம் வந்தாச்சு... இந்த குருபெயர்ச்சியால் நீங்கள் பட்டு வரும் கஷ்டங்கள் நீங்கும்... தொழிலில் நல்ல முன்னேற்றமும்¸ லாபமும் ஏற்படும்... சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள்... பதவி உயர்வு¸ சம்பள உயர்வு¸ விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் ஆகியவை கிடைக்கும்... நல்ல வேலை வாய்ப்பு¸ திருமண யோகம்¸ புத்திரபேறு ஏற்படும். சிலர் வெளிநாடு செல்வீர்கள்... பணம்¸ பொன்¸ பொருள்¸ வாகனம் சேரும்... சிலர் வீடு¸ மனை வாங்குவீர்கள்... கடன் அடைபடும்... குடும்பத்தில் உற்சாகமும் மகிழ்ச்சியும் ஏற்படும்.. இருப்பினும் தாங்கள் ஏழரை சனி பிடியில் இருப்பதை மறவாதீர்கள்...

கும்பம் : (மன சஞ்சலம் தரும் ஜென்ம குரு)

ஸ்ரீகுருபகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு தான் வருகிறார்... எனவே இந்த குருபெயர்ச்சியால் உங்களுக்கு நன்மைகள் குறைவாகவும்¸ தீமைகள் அதிகமாகவும் ஏற்படும்... ஜென்ம குருவால் மனசஞ்சலம்¸ வீண் அலைச்சல்¸ குடும்பத்தில் குழப்பம் ஏற்படும்... தொழிலில் போட்டியும்¸ பின்னடைவும் ஏற்படும்... மேலதிகாரிகளின் பகை விரும்பத்தகாத இடமாற்றம்¸ எதிலும் டென்சன் ஏற்படும்... கடன் தொல்லை¸ உடல் சோர்வு¸ தொலை தூர பயணம் ஏற்படும்... எதிலும் கவனமாக இருக்க வேண்டும். ஏழரை ஆண்டு சனிபகவானின் சஞ்சாரமும் தங்களுக்கு சாதகமாக இல்லை...உண்மையான பக்தியின் மூலம் இந்த சோதனைகளை நீங்கள் வெல்லமுடியும்.

மீனம் : (சுப செலவுகளை தரும் குரு)

12-ஆம் இடமான விரைய (செலவு) ஸ்தானத்தில் குருபகவான் சஞ்சரிக்கிறார்... விரைய குருவால் உங்களுக்கு சுபசெலவுகள் ஏற்படும். உங்கள் வீட்டில் திருமண வைபோகமோ¸ வீடு கட்டுதலோ¸ வாகனம் வாங்குதலோ போன்ற நல்ல காரியங்களுக்கு செலவுகள் செய்ய நேரிடும்... அதே சமயம் தொழிலில் பின்னடைவு¸ கடன் வாங்குதல்¸ எதிரிகளின் தொல்லை¸ நோயின் தொல்லை¸ மருத்துவ செலவு வீண் சண்டை சச்சரவு¸ கோர்ட்டு கேஸ் வம்பு வழக்கு போன்ற தீய பலன்களும் ஏற்படும். ஒரு சிலர் வெளிநாடு செல்லக்கூடும்... எது எப்படி இருந்தாலும் பணம் உங்கள் கையைவிட்டு கரையும். பலவித பிரச்சனைகளும் உங்களை துரத்தும். 

இந்த குரு பெயர்ச்சியால் அதிகளவு நன்மை பெறக்கூடிய ராசிகள் மேஷம்¸ மிதுனம்¸ சிம்மம்¸ துலாம்¸ மகரம் ஆகும். மத்திம பலன்களை பெறக்கூடிய ராசிகள் விருட்சிகம்¸ தனுசு ஆகும். தீய பலன்களை பெறக்கூடிய ராசிகள் ரிஷபம்¸ கடகம்¸ கன்னி¸ கும்பம்¸ மீனம் ஆகும். 

எனவே¸ அனைத்து ராசி அன்பர்களும் திருவண்ணாமலை மலையேறும் பாதையில் 200 ஆண்டுகளுக்கு மேலான பழமைவாய்ந்த தண்டபாணி ஆசிரமத்தில் நடைபெறும் குருபெயர்ச்சி மஹாயாக பூஜையில் பங்கேற்று அர்ச்சனை செய்து கொள்வது மிகவும் சிறந்த பரிகாரமாகும்.. 

கணித்தவர்:-

'ஜோதிட ரத்னா" டாக்டர் எல்.சீனிவாசன்¸

நிறுவனர் மற்றும் செயலாளர் ஸ்ரீதண்டபாணி ஆஸ்ரம வாலைச்சித்தர் அறக்கட்டளை.

பூஜா அமைப்புக் குழு செயலாளர். தலைவர்- ருத்ர மைத்தன் சேனை.

பொதுச் செயலாளர்- வாலைச்சித்தர் ஆன்மீகப் பேரவை.

திருவண்ணாமலை.

குறிப்பு

இந்த குரு பெயர்ச்சி பலனானது அவரவர் பிறந்த ஜாதகத்தின் அடிப்படையில் தசா புத்தியை பொறுத்து மாறுபடும் என்பதை வாசகர்கள் அறியவும். 

Next Post Previous Post

No comments