முதியவரை தொடர்ந்து இளைஞரும்-சிறுமிக்கு நேர்ந்த கொடுமை


மாடு மேய்க்க சென்ற சிறுமியை முதியவர் கற்பழித்ததை பார்த்த இளைஞரும் அந்த சிறுமியை மிரட்டி கற்பழித்த சம்பவம் வந்தவாசி அருகே நடந்துள்ளது. 

இதையடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர் 

திருவண்ணாமலை மாவட்டம்¸ வந்தவாசி அடுத்த மழவங்கரனை கிராமத்தை சேர்ந்தவர் அகமது ஜலீல்.(வயது 66). மளிகை வியாபாரி. காலையில் மளிகை வியாபாரமும்¸ மதியத்திற்கு மேல் ஆடு மேய்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். 

அதே ஊரைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு வரை படித்துள்ள 15 வயதான சிறுமியை மேற்கொண்டு படிக்க அனுப்பாமல் அவர்களது பெற்றோர்கள் மாடு மேய்க்க அனுப்பியுள்ளனர். 3 மாதங்களுக்கு முன்பு சிறுமி மாடு மேய்த்து கொண்டிருந்த போது¸  அகமது ஜலில்¸ அங்கிருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

இதை அதே கிராமத்தை வாலிபர் ஒருவர் பார்த்துள்ளார். பார்த்ததை வெளியில் சொல்லி விடுவேன் என்று மிரட்டி அவரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாராம்.

இந்நிலையில் சிறுமியின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்ததை கண்ட தாயார் அபிபா¸ மகளை விசாரித்தார். மகளை காமூகர்கள் சீரழித்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்த அபிபா  வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப் பதிவு செய்து அகமது ஜலிலை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர். சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை வலை வீசி தேடி வருகின்றனர்.

படிக்கிற வயதில் பெண் பிள்ளைகளை ஆடு¸ மாடு மேய்க்க அனுப்பும் பெற்றோர்களுக்கு இந்த மாதிரியான சம்பவங்கள் ஒரு படிப்பினையாகும். 

Next Post Previous Post

No comments