குழந்தை உள்பட 6 பேர் துடிதுடித்து இறந்த பரிதாபம்
போளுர் அருகே கார் - லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் குழந்தை உட்பட 6 பேர் ரத்த வெள்ளத்தில் பிணமானார்கள்.
வேலூர் விருபாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவர் தங்களது குல தெய்வமான செங்கம் புதூர் மாரியம்மன் கோயிலில் சாமி கும்பிடுவதற்காக இன்று (13-08-2021) தனது குடும்பத்தைச் சேர்ந்த 7 பெண்கள்¸ 2 குழந்தைகள் என 11 பேருடன் மாருதி சுசுகி காரில் புறப்பட்டு வந்தார். காரை சசிகுமார் என்பவர் ஓட்டி வந்தார்.
சந்தவாசல் அருகே வேலூர் - போளுர் நெடுஞ்சாலையில் உள்ள முனியந்தாங்கலுக்கு பகல் 2-30 மணியளவில் வந்த போது காரின் வலதுபுற டயர் திடீரென வெடித்ததாக சொல்லப்படுகிறது. இதில் கார் நிலை தடுமாறி ஓடி எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதனால் காரின் முன் பகுதியிலிருந்து பின்பகுதி வரை நொறுங்கியது. லாரியின் முன்பக்கமும் சேதம் அடைந்தது. இந்த விபத்தில் 3 மாத பெண் குழந்தை உட்பட 6 பேர் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பிணமானார்கள்.
உடனடியாக அப்பகுதியில் இருந்தவர்கள் காரில் இடுபாடிகளில் சிக்கி இருந்த 4 பேரை பலத்த காயங்களுடன் மீட்டனர். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் காரிலேயே பிணமாக கிடந்தவர்களின் உடல்களை மீட்டு ரோட்டில் கிடத்தினர்.
இறந்தவர்கள் பெயர் வருமாறு¸
1)மூர்த்தி (55)¸ 2)பரிமளா(21)¸ 3) கோமதி (26)¸ 4)ராதிகா (45)¸ 5)முனியம்மாள்(65)¸ 6)நிஷா (3 மாத குழந்தை)
காயமடைந்தவர்கள்
1)சசிகுமார் (25)¸ 2)மாலதி (45)¸ 3)கமலா (55)¸ 4)பூர்ணிமா (21) இந்த விபத்தில் நான்கு வயது சிறுவன் குமரன் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினான்.
சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார்¸ ஆரணி கோட்டாட்சியர் கவிதா ஆகியோர் பார்வையிட்டு விபத்து குறித்து கேட்டறிந்தனர். இது குறித்து சந்தவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோயிலுக்கு சாமி கும்பிட சென்றவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியிலும்¸ விருபாட்சிபுரத்திலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ராதிகா பரிதாபமாக இறந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.




No comments