17வது மாதமாக திருவண்ணாமலை கிரிவலத்திற்கு தடை

17வது மாதமாக திருவண்ணாமலை கிரிவலத்திற்கு தடை

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்வதற்கு 17வது மாதமாக பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளதால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பௌர்ணமி கிரிவலம் செல்வதற்கு பக்தர்கள்¸ பொதுமக்கள் யாரும் வர வேண்டாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் கேட்டுக் கொண்டுள்ளார். 

பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும்¸ நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும் விளங்கி வரும் திருவண்ணாமலையில் மலையே சிவனாக கருதப்படுகிறது. 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த மலையை வலம் வருவதன் மூலம் குறைகள் தீர்ந்து வாழ்வில் வளங்கள் பெறலாம் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. 

ஒவ்வொரு நாட்களிலும் மலையை வலம் வருதற்கு தனி சிறப்புகள் இருந்தாலும் முழு நிலவு நாளான பவுர்ணமி தினத்தில் கிரிவலம் வருவது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. 

அவ்வப்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் பவுர்ணமி கிரிவலத்திற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்த மாதம் 17வது மாதமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. 

17வது மாதமாக திருவண்ணாமலை கிரிவலத்திற்கு தடை

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது¸ 

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திகழ்ந்து கொண்டிருக்கும் திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுரர் திருக்கோயில் 14 கிலோ மீட்டர் மலை சுற்றும் பாதையில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாட்களில் கிரிவலம் வருவதற்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்தும்¸ மாநிலங்களிலிருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை புரிந்து வருகிறார்கள். 

கொரோனா பரவல் கட்டுப்படுத்த தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால்¸ திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் நடைபெறும் நாட்களான 21.08.2021 (சனிக்கிழமை) இரவு 7.19 முதல்¸ 22.08.2021 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.17 வரை¸ திருவண்ணாமலை மலை சுற்றும் பாதையில் 14 கி.மீ. கிரிவலம் வருவதற்கு அனுமதி கிடையாது. இதன் காரணமாக திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் வர வேண்டாம் என பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

17வது மாதமாக திருவண்ணாமலை கிரிவலத்திற்கு தடை

தமிழ்நாடு அரசின் கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி¸ கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் கட்டுபடுத்தவும்¸ பொதுமக்களை பாதுகாக்கவும் எடுக்கப்பட்டுள்ள மேற்கண்ட நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 

இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ் தெரிவித்துள்ளார். 

கிரிவலத்திற்கு மட்டும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருவது பக்தர்களை விரக்தியடைய செய்துள்ளது. 

Next Post Previous Post

No comments