திருவண்ணாமலை: ஓட்டு போடாதவர்கள் 4 லட்சம் பேர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான வாக்குகளின் இறுதி சதவீத விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 4லட்சத்து 36ஆயிரத்து 273பேர் வாக்களிக்கதாதது தெரியவந்துள்ளது.
தேர்தல் கமிஷன் நேற்றிரவு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ள ஒவ்வொரு தொகுதிகளிலும் பதிவான வாக்குகளின் விவரம் வருமாறு¸
திருவண்ணாமலை
ஆண்கள் 1லட்சத்து 38ஆயிரத்து 502 பேரில் 1லட்சத்து 664 பேரும்¸ பெண்கள் 1லட்சத்து 47ஆயிரத்து 839 பேரில் 1லட்சத்து 4 ஆயிரத்து 632 பேரும்¸ திருநங்கை 39 பேரில் 16 பேரும் வாக்களித்துள்ளனர். மொத்தம் 2 லட்சத்து 86ஆயிரத்து 380 பேரில் 2லட்சத்து 5ஆயிரத்து 312 பேர் வாக்களித்துள்ளனர். இது 71.69 சதவீதமாகும். 2016ல் 78.99 சதவீதம்
கீழ்பென்னாத்தூர்
ஆண்கள் 1லட்சத்து 24 ஆயிரத்து 190 பேரில் 99ஆயிரத்து 929 பேரும்¸ பெண்கள் 1லட்சத்து 28ஆயிரத்து 902 பேரில் 1லட்சத்து 895 பேரும்¸ திருநங்கை 9 பேரில் ஒருவரும் வாக்களித்துள்ளனர். மொத்தம் 2 லட்சத்து 53ஆயிரத்து 101 பேரில் 2லட்சத்து 825 பேர் வாக்களித்துள்ளனர். இது 79.35 சதவீதமாகும். 2016ல் 84.26 சதவீதம்
செங்கம்(தனி)
ஆண்கள் 1லட்சத்து 36ஆயிரத்து 247பேரில் 1லட்சத்து 10ஆயிரத்து 349 பேரும்¸ பெண்கள் 1லட்சத்து 38ஆயிரத்து 714 பேரில் 1லட்சத்து 11ஆயிரத்து 446 பேரும்¸ திருநங்கை 2 பேரில் 2 பேருமே வாக்களித்துள்ளனர். மொத்தம் 2 லட்சத்து 74 ஆயிரத்து 963 பேரில் 2லட்சத்து 21ஆயிரத்து 797 பேர் வாக்களித்துள்ளனர். இது 80.66 சதவீதமாகும். 2016ல் 83.80 சதவீதம்
கலசப்பாக்கம்
ஆண்கள் 1லட்சத்து 19 ஆயிரத்து 582 பேரில் 96 ஆயிரத்து 823 பேரும்¸ பெண்கள் 1லட்சத்து 23 ஆயிரத்து 206 பேரில் 98 ஆயிரத்து 290 பேரும்¸ திருநங்கை 12 பேரில் 9 பேரும் வாக்களித்துள்ளனர். மொத்தம் 2 லட்சத்து 42 ஆயிரத்து 800 பேரில் 1 லட்சத்து 95 ஆயிரத்து 122 பேர் வாக்களித்துள்ளனர். இது 80.36 சதவீதமாகும். 2016ல் 84.67 சதவீதம்
போளுர்
ஆண்கள் 1 லட்சத்து 19 ஆயிரத்து 628 பேரில் 98 ஆயிரத்து 913 பேரும்¸ பெண்கள் 1லட்சத்து 24 ஆயிரத்து 200 பேரில் 1 லட்சத்து 1836 பேரும்¸ திருநங்கை 5 பேரில் 3 பேரும் வாக்களித்துள்ளனர். மொத்தம் 2 லட்சத்து 43 ஆயிரத்து 833 பேரில் 2 லட்சத்து 752 பேர் வாக்களித்துள்ளனர். இது 82.33 சதவீதமாகும். 2016ல் 85.52 சதவீதம்
ஆரணி
ஆண்கள் 1 லட்சத்து 33 ஆயிரத்து 657 பேரில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 304 பேரும்¸ பெண்கள் 1 லட்சத்து 42 ஆயிரத்து 413 பேரில் 1 லட்சத்து 12 ஆயிரத்து 110 பேரும்¸ திருநங்கை 22 பேரில் 7 பேரும் வாக்களித்துள்ளனர். மொத்தம் 2 லட்சத்து 76 ஆயிரத்து 92 பேரில் 2 லட்சத்து 20 ஆயிரத்து 421 பேர் வாக்களித்துள்ளனர். இது 79.84 சதவீதமாகும். 2016ல் 81.78 சதவீதம்
வந்தவாசி(தனி)
ஆண்கள் 1 லட்சத்து 18 ஆயிரத்து 602 பேரில் 92 ஆயிரத்து 951 பேரும்¸ பெண்கள் 1 லட்சத்து 21 ஆயிரத்து 929 பேரில் 91 ஆயிரத்து 804 பேரும் வாக்களித்துள்ளனர். திருநங்கைகள் 2 பேரில் யாரும் வாக்களிக்கவில்லை. மொத்தம் 2 லட்சத்து 40 ஆயிரத்து 533 பேரில் 1 லட்சத்து 84 ஆயிரத்து 755 பேர் வாக்களித்துள்ளனர். இது 76.81 சதவீதமாகும். 2016ல் 81.21 சதவீதம்
செய்யாறு
ஆண்கள் 1 லட்சத்து 26 ஆயிரத்து 914 பேரில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 252 பேரும்¸ பெண்கள் 1 லட்சத்து 32 ஆயிரத்து 823 பேரில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 931 பேரும் வாக்களித்துள்ளனர். 1திருநங்கை வாக்கை பதிவு செய்யவில்லை. மொத்தம் 2 லட்சத்து 59 ஆயிரத்து 738 பேரில் 2 லட்சத்து 12 ஆயிரத்து 183 பேர் வாக்களித்துள்ளனர். இது 81.69 சதவீதமாகும். 2016ல் 84.18 சதவீதம்
1 லட்சம் வீடுகள்
2021 தேர்தலில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் சேர்த்து உள்ள 10 லட்சத்து 17 ஆயிரத்து 322 ஆண் வாக்காளர்களில் 81 ஆயிரத்து 4 ஆயிரத்து 185 பேரும்¸ 10 லட்சத்து 60 ஆயிரத்து 26 பெண் வாக்காளர்களில் 82 ஆயிரத்து 6 ஆயிரத்து 944 பேரும்¸ 92 திருநங்கைகளில் 38 பேரும் வாக்களித்திருக்கிறார்கள். மொத்தம் 20 லட்சத்து 77 ஆயிரத்து 440 பேரில் 16 லட்சத்து 41 ஆயிரத்து 167 பேர் மட்டுமே வாக்களித்திருக்கின்றனர். 4 லட்சத்து 36 ஆயிரத்து 273 பேர் வாக்களிக்கவில்லை. இது 2 தொகுதி வாக்காளர்களுக்கு சமமானதாகும்.
8 தொகுதிகளிலும் சேர்த்து 79 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால் 2016ம் ஆண்டு 82.99 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. தேர்தலுக்கு முன்பு 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கலெக்டர் சந்தீப் நந்தூரி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினார். 2016 தேர்தலில் குறைந்த அளவு வாக்குப்பதிவு நடைபெற்ற 136 வாக்குச் சாவடிகளைச் சேர்ந்த 1 லட்சம் வீடுகளுக்கு தவறாமல் வாக்களிக்க கோரி கடிதம் அனுப்பினார்.
நோட்டாவுக்கு ஓட்டு
மேலும் இளம் தலைமுறையினர் வாக்களிக்க மாணவ- மாணவியர்களை கல்லூரி தேர்தல் பொறுப்பாளர்களாக நியமித்தார். கிரிவலப்பாதையில் இம்மாவட்டத்தில் உற்பத்தியாகும் பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்களான கண்காட்சியையும் திறந்து வைத்தார். மனைவி¸ மகனுடன் சைக்கிளில் கிரிவலம் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார். ஆவின் பால் பாக்கெட்டுகள்¸ கேஸ் சிலிண்டர்கள்¸ அரிசி மூட்டைகள்¸ தண்ணீர் கேன்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி அனுப்பினார். முக்கியமாக எந்த தேர்தலிலும் வாக்களிக்காதவர்களை கண்டுபிடித்து வாக்காளர் அடையாள அட்டையை வழங்கி வாக்களிக்க வழிவகை செய்தார். எந்த வேட்பாளரும் பிடிக்கவில்லை என்றால் நோட்டாவுக்காவது ஓட்டு போடுங்க¸ வாக்களிக்காமல் இருக்காதீர்கள் என்ற வேண்டுகோளையும் வைத்தார்.
கொரோனா பரவல்
மேலும் வாக்காளர்களுக்கு வாக்குச் சாவடிகளில் போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டது. இது தவிர சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக கூடுதல் வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டன. இவ்வளவு ஏற்பாடுகளை செய்து தந்தும்¸ விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும் 2016 தேர்தலை விட 3.99 சதவீதம் ஏறக்குறைய 4 சதவீதம் வாக்கு குறைந்துள்ளதற்கு கொரோனா பரவலும்¸ ஆர்வம் குறைந்ததும் காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
மாவட்ட ஆட்சித் தலைவர்¸ விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்திருக்காவிட்டால் மேலும் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.


No comments