4 வயதில் உலக சாதனை-சிறுவனுக்கு கலெக்டர் பாராட்டு

4 வயதில் உலக சாதனை-சிறுவனுக்கு குவியும் பாராட்டு

திருவண்ணாமலையில் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் விதமாக முட்டை மற்றும் தக்காளி மீது அமர்ந்து பல்வேறு யோகாசனங்களை செய்த 4 வயது சிறுவன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தான். 

யோகாசனம் 

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே செயல்படும் தீபமலை ஆன்மிகத் தொண்டு இயக்கம்¸ தீபமலை மெடிக்கல் இன்ஸ்டியூட் ஆப் எலக்ட்ரோபதி மற்றும் மருத்துவமனை சார்பில் யோகாசனங்களை செய்து உலக சாதனை நிகழ்த்தும் நிகழ்ச்சி கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் நடைபெற்றது. 

போப் தொண்டு நிறுவன இயக்குநரும்¸ வழக்கறிஞருமான ஆர்.எல்.ரொசாரியோ¸ வழக்கறிஞர் கே.திருநாராயணன்¸ வடஆண்டாப்பட்டு ஊராட்சி தலைவர் மோகன்¸ ஆசிரியர் டி.கே.முருகன்¸ அரசு மருத்துவர் க.பாலமுரளி¸ அறிவியல் ஆசிரியர் ஹயாத்பாஷா¸ ஓம் ஆதிபகவன் அறக்கட்டளை நிறுவனர் தீபம் சரவணன்¸ பொன்னன்;¸ எச்.ஹனீஷ்குமார் மற்றும் முக்கிய பிரமுகர்கள்¸ பொது மக்கள் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

4 வயதில் உலக சாதனை-சிறுவனுக்கு குவியும் பாராட்டு

தக்காளி¸ முட்டை மீது 

மேடையில் முதலில் தக்காளியும் அதன் மீது முட்டையும் வைக்கப்பட்டிருந்தது. அதன் மீது அமர்ந்து மருத்துவமனை முதல்வர் ராஜா ஹரிகோவிந்தன் - டாக்டர் யமுனா ஆகியோரின் மகனும்¸ யுகேஜி மாணவனுமான தர்ஷன் (வயது 4) பத்மாசனா¸ யோகமுத்ரா¸ பர்வதாசனம்¸ தாடாசனம் உள்ளிட்ட யோகாசனங்களை செய்து காட்டி அசத்தினான்.

கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் சூழலில் யோகாசனங்கள் செய்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள முடியும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த உலக சாதனை நிகழ்ச்சி செய்யப்பட்டுள்ளதாக யோகா பயிற்சியாளர் சுரேஷ்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கலெக்டர் பாராட்டு

சிறுவனின் இந்த சாதனையை அங்கீகரித்து யுனிவர்சல் புக்ஸ் ஷாப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் சான்றிதழ் மற்றும் பரிசுகோப்பைகளை வழங்கியுள்ளது. யுனிவர்சல் புக்ஸ் ஷாப் ரெக்கார்ட்ஸ் என்பது இந்தியாவிலும் உலகெங்கிலும் வாழும் தனித்துவமான மற்றும் அசாதாரண திறமைகளைக் கொண்ட ஒவ்வொரு இந்தியருக்கும் தங்கள் திறமைகளை உலகின் பிற பகுதிகளுக்கு வெளிப்படுத்துகிற நிறுவனமாகும். 

உலக சாதனை படைத்த தர்ஷன்¸ சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பையை திருவண்ணாமலை கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் காண்பித்து வாழ்த்து பெற்றான். அப்போது அவர் தர்ஷனுக்கு பாராட்டு தெரிவித்து மென்மேலும் பல்வேறு சாதனைகளை படைக்க வாழ்த்து தெரிவித்தார். 

அப்போது தர்ஷனின் பெற்றோர்கள் ராஜா ஹரிகோவிந்தன் - டாக்டர் யமுனா¸ தொழிலதிபர் எஸ்.தங்கவேலு மற்றும் ஸ்ரீரங்கன்¸ அனீஷ்குமார்¸ யோகா ஆசிரியை கல்பனா ஆகியோர் உடன் இருந்தனர்.

4 வயதில் உலக சாதனை-சிறுவனுக்கு குவியும் பாராட்டு

பவர்ஸ்டார் 

உலக சாதனை படைத்த தர்ஷனை சினிமா நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மற்றும் பலர் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 


Next Post Previous Post

No comments