பங்க் பாபு கொலை வழக்கில் 3 பேர் கைது
NEWS THIRUVANNAMALAI
7 Dec, 2020
திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்திய பங்க் பாபு கொலை வழக்கில் 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை ரியல் எஸ்டேட் அதிபரும்¸ திமுக பிரமுகருமான பங்க் பாபு(47) கடந்த 3ந் தேதி திருவண்ணாமலை காந்தி நகர் பைபாஸ் சாலையில் பட்டப்பகலில் கூலிப்படையினரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை ரியல் எஸ்டேட் அதிபரும்¸ திமுக பிரமுகருமான பங்க் பாபு(47) கடந்த 3ந் தேதி திருவண்ணாமலை காந்தி நகர் பைபாஸ் சாலையில் பட்டப்பகலில் கூலிப்படையினரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
கனகராஜின் மனைவி
2017ம் ஆண்டு பங்க் பாபுவால் கொலை செய்யப்பட்ட அதிமுக நகர செயலாளராக இருந்த கனகராஜ் குடும்பத்தினர் பழிக்கு பழியாக இந்த கொலையை அரங்கேற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
கொலையாளிகளை பிடிக்க தனிப்படையினர் பெங்களுர் உள்பட பல்வேறு ஊர்களில் முகாமிட்டுள்ளனர். ஆனாலும் அதில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில் கனகராஜின் மனைவி ஞானசொளந்தரி (32), அவரது தாய் ராணி(58), அவரது தாய் மாமன் சுரேஷ் (32) ஆகிய 3 பேரை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர்.

ஜெயிலில் அடைப்பு
கனகராஜை கொலை செய்ததால் அதற்கு பழிக்குப் பழிவாங்கும் வகையில் பங்க்பாபுவை கொலை செய்தது தெரியவந்துள்ளது.
கூலிப்படை மூலம் இந்த கொலைையை அரங்கேற்றியதாக கூறப்படுகிறது. இது பற்றிய விவரம் விரைவில் தெரிவிக்கப்படும் என்று போலீசார் கூறினர்.
கைது செய்யப்பட்ட 3 பேரும் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே கொலையாளிகளில் ஒருவனை போலீசார் பிடித்து விட்டதாக சொல்லப்படுகிறது.
ஆன்மீக நகரில் அமைதி திரும்புமா?
திருவண்ணாமலையில் கூலி படையை ஏவி கொலை செய்யப்படுவது அடிக்கடி நடைபெற்று வருவது நகர மக்களையும், பக்தர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
2011ம் ஆண்டு கீழ் அணைக்கரையில் தங்கியிருந்த திண்டிவனத்தைச் சேர்ந்த ரவுடி கார்த்தி, வீடு புகுந்து வெட்டி கொலை செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த வாலிபரை கண்களில் மிளகாய் பொடியை தூவி கூலி படையினர் வெட்டி கொலை செய்தனர். 2018ம் ஆண்டு தனது மகனை கொலை செய்த கள்ளக்காதலன் நாகராஜனை திருவண்ணாமலை அய்யங்குளத்தெருவில் சென்னை மின்வாரிய அலுவலர் மஞ்சுளா கூலி படையை ஏவி கொலை செய்தார்.
இதே போல் திருவண்ணாமலை திருமஞ்சன கோபுரம் அருகில் அதிமுக பிரமுகர்கள் கனகராஜ், ஊத்தாங்கல் துரை ஆகியோர் வெட்டி கொலை செய்யப்பட்டனர். கலெக்டர் அலுவலகம், மாவட்ட போலீஸ் அலுவலகம் அருகில் குண்ணு முறிஞ்சியை சேர்ந்த தினகரன் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
கடந்த பிப்ரவரி மாதம் மத்திய பஸ் நிலையம் அருகில் ஆட்டோ டிரைவர் ஆனந்த் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்டார்.
ஆன்மீக நகரில் கூலி படையினர் நுழைந்து கொலைகளை செய்து வருவதை போலீசார் இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என பொதுமக்களும், பக்தர்களும் எதிர்பார்க்கின்றனர்.

No comments