திருவண்ணாமலை: தலைகுப்புற கார் கவிழ்ந்து 2 பேர் சாவு
திருவண்ணாமலை அருகே தலைகுப்புற கார் கவிழ்ந்ததில் பெண் உள்பட 2 பேர் இறந்தனர்.
காரில் 12 பேர்
திருவண்ணாமலை அடுத்த கலசப்பாக்கம் அருகே உள்ள நட்சத்திர கோயிலைச் சேர்ந்தவர் ஜெயவேலு (வயது 63). இவர் தனது மனைவி மகேஸ்வரி(57) மற்றும் உறவினர்கள் 10 பேருடன் செஞ்சியை நோக்கி சைலோ காரில் காரில் சென்று கொண்டிருந்தார். காரை நட்சத்திர கோயிலைச் சேர்ந்த வாசுதேவன்(35) ஓட்டிச் சென்றார்.
குறுக்கே மோட்டார் சைக்கிள்
இன்று காலை 11-30 மணியளவில் திருவண்ணாமலை¸ரிங் ரோடு பைபாஸ் சாலை செல்வ விநாயகர் நகர் அருகில் வந்தபோது குறுக்காக வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க காரை டிரைவர் வேகமாக திருப்பியதாக கூறப்படுகிறது. இதில் அருகில் இருந்த விவசாய நிலத்தில் கார் தலைகுப்புற கவிந்ழ்தது.
இடிபாடுகளில் சிக்கினர்
![]() |
| ஜெகதீஸ்வரி |
இதில் சேலம் அம்மாபேட்டைச் சேர்ந்த குணாவின் மனைவி ஜெகதீஸ்வரி(42) அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். கார் டிரைவர் வாசுதேவன்¸ ஜெயவேலு¸ அவரது மனைவி மகேஸ்வரி¸ வடமாதிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகத்தின் மகன் ஆறுபடையப்பன்(50)¸ சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த ராஜேஷ் மனைவி ஜோதி(31)¸ மகன்கள் பிரதேஷ்(11)¸ தியானேஷ்(9)¸ ஜெகதீஸ்வரியின் கணவர் குணா(47)¸ தணிகாசலம்(60)¸ அவரது மனைவி ரமணி(50)¸ சேகர் மனைவி செண்பகம்(50) ஆகிய 11 பேர் கார் இடிபாடுகளில் சிக்கி காப்பாற்ற சொல்லி கூச்சலிட்டனர்.
மருத்துவமனையில் உயிரிழப்பு
![]() |
| ஆறுபடையப்பன் |
அப்போது அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டனர். 11 பேரும் சிகிச்சைக்காக் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுபடையப்பன் இறந்தார்.
ஜெயவேலு மற்றும் அவரது உறவினர்கள் திருமணமான தம்பதிகளை மறுவீடு அழைப்பதற்காக சென்ற போது விபத்தில் சிக்கியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
போலீசுக்கு எல்லை பிரச்சனை
விபத்து நடைபெற்ற இடம் யார் எல்லையில் வருகிறது என மங்கலம் போலீசாருக்கும்¸ திருவண்ணாமலை கிழக்கு போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் நீண்ட நேரம் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்யப்படாமல் இருந்துது. ஒரு வழியாக மேலதரிகாரிகளின் தலையீட்டால் இன்று மாலை திருவண்ணாமலை கிழக்கு போலீசார் இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.



No comments