2 சிறுமிகள் படுகொலை-தாய் உயிர் ஊசல்

கடப்பாரையால் குத்தி குழந்தைகளை கொலை செய்த ஈவு¸ இரக்கமற்ற தந்தை 

மனைவி¸ மற்றும் தனது 2 குழந்தைகளை கடப்பாரையால் குத்தி விட்டு வாலிபர் ஒருவர் விஷம் அருந்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் 2 குழந்தைகளும் பரிதாபமாக இறந்தனர். மனைவியின் உயிர் ஊசலாடி வருகிறது. 

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த ராயப்பேட்டை கிராமத்தில் வசித்து வருபவர் முருகன் (வயது 38). நெசவு தொழிலாளி. இவரது மனைவி தேவிகா(28). இவர்களது  மகள்கள் மீனா(10)¸ ஷிவானி((8). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர். 

அரசு பள்ளியில் தூய்மை பணியாளராக இருந்த தேவிகா¸ ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் கீழ்பென்னாத்தூரில் உள்ள ஓட்டல் ஒன்றில் வேலை செய்து வந்தார். நெசவு தொழிலில் நஷ்டம் ஏற்படவே முருகன் மனஉளைச்சலில் இருந்து வந்தார். மனைவியின் வருமானத்தில் வாழ்வதா? என வேதனையுடன் இருந்த முருகனுக்கு மனைவி தேவிகாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.  இந்நிலையில் நேற்று இரவு அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. 

வெளியில் சென்று விட்டு கையில் கடப்பாறையுடன் வந்த முருகன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 3 பேரின் தலையிலும் கடப்பாரையால் ஓங்கி குத்தினார். இதில் ஷிவானி ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் துடிதுடித்து பிணமானார். மீனாவும்¸ தேவிகாவும் உயிருக்கு போராடினர். அவர்கள் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே மீனா பரிதாபமாக இறந்தார். தேவிகா ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

மனைவி¸ மகள்களை கடப்பாறையால் குத்திய முருகன் எலிமருந்தை குடித்து விட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரும் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த்¸ உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்சுருதி¸ கிராமிய துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை¸ பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இது சம்மந்தமாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சந்தேக புயலால் ஏதுமறியாத அப்பாவி சிறுமிகள் தூக்கத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


Next Post Previous Post

No comments